Tamilisai: மேடையிலேயே அமித் ஷா கண்டித்தாரா? தமிழிசை தந்த பரபரப்பு விளக்கம்!
Amit Shah Video : கடந்த 12ஆம் தேதி ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். விஜயவாடாவில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மோடையில் அமித் ஷா மற்றும் தமிழிசை இடையேயான உரையாடல் சமூக வலைதளத்தில் பேசும்பொருளாக மாறியது. அதாவது, தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டித்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழிசை தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ”நேற்று நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2024 தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்தேன். அப்பேது அவர், தேர்தலுக்கு பிந்தைய சூழல், களத்தில் உள்ள சவால்கள் பற்றி என்னிடம் கேட்டார்" என்றார்.
தமிழிசை விளக்கம்: கடந்த 12ஆம் தேதி ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். விஜயவாடாவில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மோடையில் அமித் ஷா மற்றும் தமிழிசை இடையேயான உரையாடல் சமூக வலைதளத்தில் பேசும்பொருளாக மாறியது. அதாவது, தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டித்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழிசை தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ”நேற்று நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2024 தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்தேன். அப்பேது அவர், தேர்தலுக்கு பிந்தைய சூழல், களத்தில் உள்ள சவால்கள் பற்றி என்னிடம் கேட்டார். மேலும், அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை கவனிக்குமாறு என்னை அறிவுறுத்தினார். இந்த சந்திப்பு தொடர்பாக தேவையற்ற யூகங்களையும் தெளிவுப்படுத்தவே இந்த விளக்கத்தை அளித்துள்ளேன்” என்று தமிழிசை பதவிட்டிருந்தார்.
Also Read: ”3ஆம் பாலினத்தவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடந்தது என்ன?
ஆந்திவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு சேதம் கட்சி வெற்றி பெற்றது. இதனை அடுத்து, கடந்த 12ஆம் தேதி ஆந்திர முதல்வராக பதவியேற்றார். விஜயவாடாவில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியில் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழா மோடையில் அமித் ஷா மற்றும் தமிழிசை இடையேயான உரையாடல் சமூக வலைதளத்தில் பேசும்பொருளாக மாறியது. அந்த வீடியோவில், விழா மேடையில் வணக்கம் சொல்லி செல்லும் தமிழிசை சௌந்தரராஜனை அழைக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முகத்தை கோபமாக வைத்து கொண்டு ஏதோ கண்டிப்பது போல பேசுவதாக தெரிகிறது. அதற்கு விளக்கமளிக்க முயற்சிக்கும் தமிழிசை சௌந்தரராஜனிடம் இல்லை.. இல்லை.. என விரல்களை நீட்டிக் கூறுவது போல் வீடியோவில் தெரிகிறது.
இந்த வீடியோவிற்கு பலரும் பல கருத்துகளைப் தெரிவித்து வந்தனர். கடந்த வாரம் சிலர் இணையத்தில் தன்னை பற்றி அவதூறாக கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும், முன்னாள் மாநில தலைவர் என்ற அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என பேசியிருந்தார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அமித் ஷா கண்டித்து இருக்கலாம் என பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டனர். இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
Also Read: நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் ரத்து… தேசிய முகமை மறு தேர்வு நடத்த முடிவு..!