“ராமதாஸ் பற்றி அப்படி பேசுவதா?”.. முதல்வர் ஸ்டாலினுக்கு வலுக்கும் கண்டனங்கள்..

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசிய கருத்துகள் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு அன்புமணி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   

ராமதாஸ் பற்றி அப்படி பேசுவதா?”.. முதல்வர் ஸ்டாலினுக்கு வலுக்கும் கண்டனங்கள்..

ஸ்டாலின் - ராமதாஸ்

Updated On: 

25 Nov 2024 18:40 PM

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசிய கருத்துகள் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.  இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல்/மனம சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள் விழுதுகள் ஒருங்கிணைத்த சேவை மையத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

“ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை”

இதன்பிசெய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசிய தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.  இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, சென்னையில் செய்தியாளர்கள் அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வர் சந்தித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியல் இல்லை.  அதானி விவகாரம் குறித்து துறையின் அமைச்சர் கூறியிருக்கிறார். அதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம்” என்று கூறியிருந்தார். ராமதாஸ்  குறித்து முதல்வர் அவமரியாதையாக பேசுவதாக எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read : டிசம்பர் 9ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்.. எதிர்க்கட்சிகளின் பிளான் என்ன?

வலுக்கும் கண்டனங்கள்:

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ”ராமதாஸ் குறித்து முதல்வர் பேசியது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ்.  அவரை இப்படி அவமதிக்கும் வகையில் ஒரு முதல்வர் பேசுவது சரியா? இந்தியாவில் அத்தனை தலைவர்களும் ராமதாஸை மதிக்கும் சூழலில், ஒரு முதல்வர் இவ்வளவு ஆணவத்துடன் பேசவது அந்த பதவிக்கு அழகு கிடையாது.

அதானி குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்க தேவையில்லை. ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்தகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் ராமதாஸுக்கு வேலை இல்லை கூறியது ஸ்டாலினின் அதிகார அகம்பாவத்தையே காட்டுகிறது” என்று கடுமையாக சாடினார்.

இதனை அடுத்து, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “முதல்வர் அவர்களே மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல்ல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா.

”ஆணவம் வேண்டாம்”

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்… அதுவும் பாமக தலைவர் பெரியவர்
ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலையில்லாமல் இதை சொல்லவில்லை.. தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன்..

2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்.. யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை” என்று தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார்.

Also Read : ’ரெட் அலர்ட்’ தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் வார்னிங்!

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ஐயா திரு. ராமதாஸ்  அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?