Tamilnadu Assembly: கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்.. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறையில் வெளியான அறிவிப்புகள் என்ன?

Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல் அதிமுக கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டு வருகிறது. அமளியில் ஈடுபட்டதால் அவைக்காவலர்களை கொண்டு அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து ஏற்கனவே தெளிவான விளக்கத்தை அளித்துள்ளதாகவும், அதிமுக தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அதிமுகவினர் அமளியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.

Tamilnadu Assembly: கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்.. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறையில் வெளியான அறிவிப்புகள் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

25 Jun 2024 14:28 PM

தமிழ்நாடு சட்டப்பேரவை: தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல் அதிமுக கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டு வருகிறது. சட்டப்பேரவையில், கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுகவினர் முழுக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, அவையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிக்க வேண்டும் எனவும், அவையை மதிக்காமல் இருப்பது தவறு எனவும், தங்களுக்கு விதி தெரியும், வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பிறகு பேச அனுமதி தருவதாக கூறினார். இருப்பினும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவைக்காவலர்களை கொண்டு அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து ஏற்கனவே தெளிவான விளக்கத்தை அளித்துள்ளதாகவும், அதிமுக தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அதிமுகவினர் அமளியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், அவை விதிமுறைப்படி கேள்வி நேரம் முடிந்த பின்பு தான் மற்ற பணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர், மக்களவை தேர்தலில் 40க்கு 40 திமுக கூட்டணி வென்றதை பொறுக்க முடியாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்வதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Also Read: வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்!

அதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் புதிய குறித்த புதிய அறிவிப்புகள் வெளியானது. அதில், “ தமிழ்நாடு பசுமை கரங்கள் திட்டம் – காலநிலை இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும். தமிழ்நாடு நாள்தோறும் நல வாழ்வு திட்டம் – காலநிலை இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 3 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும்.

தமிழ்நாடு பசுமை தொழில் முனைவோர் திட்டம் – காலநிலை இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 3 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும். பசுமை பள்ளிக்கூட திட்டம் 100 பள்ளிகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டி வாரியத்தின் நிதியிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு – ஆரம்ப கட்டமாக சென்னை பெருங்குடி, புதுக்கோட்ட திருக்கட்டளை உள்ளிட்ட மாநகராட்சி திடக்கழிவு கிடங்குகளில் 4 கோடி ரூபாய் மதிப்பில் வெப்ப புகைப்பட கருவி மற்றும் விஷவாய் கண்டறியும் சென்சார்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் மில்லியன் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒலி வரைபட ஆய்வு மேற்கொள்ளுதல் (சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை) 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும். வாரிய ஆய்வகங்களை காற்று மற்றும் நீர் பகுப்பாய்வுக்கான அதிநவீன கையடக்க கருவிகளைக் கொண்டு 6 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு ஏரிகளின் நிகழ்நேர தரக் கண்காணிப்பு திட்டம் (TNLMP) பூண்டி செம்பரம்பாக்கம், உதகமண்டலம் மற்றும் கொடைக்கானல் ஏரிகளில் 5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் (TN-SHORE) திட்டத்தின் கீழ் கடலோர மாவட்டங்களில் கடற்கரை மாசினை குறைக்க 100 கோடி ரூபாய் மதிப்பில் மாசு குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டம். அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் ஒரு வாரம் முழுவதும் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு திட்டம் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இனி மழை இல்லை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை சொல்லும் தகவல் என்ன?

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!