Tamilnadu Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்..
Assembly: அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சபையில் வினாக்கள் விடைகள் நேரத்திற்கு முன்னதாகவே பேச வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சட்டசபை தொடங்கிய நாள் முதல் அதிமுக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து பேரவைக்கு வருகின்றனர். இன்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், ” மலிவான விளம்பரத்தை தேடி எதிர்கட்சியினர் அலைகின்றனர். அவை விதியின் படி அதிமுக உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்ய வேண்டுமென முன்மொழிகிறேன்” என தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை: சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வின்போது அதிமுக தொடர்ந்து இன்றும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்திற்கு முன்னதாகவே அமலியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அமலியில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் உட்பட அதிமுக உறுப்பினர்களை இந்த சட்டமன்ற கூட்டம் முடியும் வரை உள்ளே அனுமதிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என சட்டமன்றத் தொடங்கிய முதல் நாளில் இருந்து தெளிவாக தெரிவித்து இருக்கிறேன். ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் பிரச்சனையை பற்றி பேரவையில் பேச வாய்ப்பிருப்பதாக தெரிவித்தும் அதை ஏற்க மனம் இல்லாமல் வெளியில் சென்று பேசுவது என்பது இந்த பேரவைக்கும், நம்முடைய மாண்புக்கும் மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதான எதிர்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயக கடமை ஆற்றாமல் வீண் விளம்பரத்தை தேடுவதிலே முனைப்பாக உள்ளது. ஆனால் இந்த துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு இருக்கிறது. இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Also Read: ஒன்ப்ளஸ் நோர்டு சி.இ.4 vs நோர்டு சி.இ.4 லைட்: எதை வாங்கலாம்?
அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சபையில் வினாக்கள் விடைகள் நேரத்திற்கு முன்னதாகவே பேச வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சட்டசபை தொடங்கிய நாள் முதல் அதிமுக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து பேரவைக்கு வருகின்றனர். இன்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், ” மலிவான விளம்பரத்தை தேடி எதிர்கட்சியினர் அலைகின்றனர். இதற்காக பாவலா காட்டி உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருக்கிறார்கள். அவை விதியின் படி அதிமுக உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்ய வேண்டுமென முன்மொழிகிறேன்” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, இந்த கூட்டத்தொடர் முடியும் வரை அதிமுகவினர் பேரவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது என சபாநாயகர் அறிவித்தார். கடந்த சில நாட்களாக அதிமுகவினர் அமளியில் ஈடுபடுவதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் பேரவையில் கலந்துக்கொள்ள கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.