Tamilnadu Assembly: மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா.. சட்டபேரவையில் தாக்கல்..! - Tamil News | | TV9 Tamil

Tamilnadu Assembly: மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா.. சட்டபேரவையில் தாக்கல்..!

கள்ள ச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி கொண்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்வது அதிமுகவின் திசை திருப்பும் நாடகம் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் விமர்சனம் செய்தார். பின் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tamilnadu Assembly: மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா.. சட்டபேரவையில் தாக்கல்..!

தமிழ்நாடு சட்டப்பேரவை

Published: 

29 Jun 2024 12:56 PM

தமிழ்நாடு சட்டப்பேரவை: இன்றைய சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி அருந்துதல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதே போல மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதிய இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது. எனவே தான், கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படகூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளசாரய விற்பனை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசிம் என்றும் அரசு கருதுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  ஜியோ, ஏர்டல் வரிசையில் வோடாஃபோன்.. அதிரடியாக உயர்ந்த ரிசார்ஜ் கட்டணம்..!

இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனையின் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையினுடைய அளவையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுவகை மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்க, கொண்டு செல்வற்கும் வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையோடு பத்து லட்ச ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல குற்றங்களில் பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களில் மூடி முத்திரையிடவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணைமுறிவிணை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து மற்றும் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்த சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

Also Read: சென்னையில் பதுங்கி இருந்த தீவிரவாதி.. துப்பாக்கி முணையில் கைது..!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!