5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Annamalai: வெளியான வீடியோ.. மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்!

அன்னபூர்ணா சீனிவாசன்: கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதனை அடுத்து, நேற்று நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த நிலையில், தனிப்பட்ட சந்திப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்டது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.

Annamalai: வெளியான வீடியோ.. மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்!
அண்ணாமலை (photo Credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Nov 2024 10:56 AM

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை:  கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இந்த சம்பந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து, நேற்று நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த நிலையில், தனிப்பட்ட சந்திப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்டது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார். மேலு, அவர் அன்னபூர்ணா சீனிவாசனை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் அவர் பதிவிட்டிருப்பதாவது, “அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசனிடம் நான் பேசினேன்.

மத்திய நிதி அமைச்சருக்கும், அன்னாபூர்ணா சீனிவாசனுக்கு இடையே நடந்த தனிப்பட்ட சந்திப்பின் உரையாடல் தொடர்பான வீடியோ பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் கட்சியினர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணா தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை மரியாதையுடன் இத்துடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.

Also Read: அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

என்ன நடந்தது?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தொழில் அமைப்பினருடன் மத்திய நதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்து கொண்டிருந்தார். கோவை கொடிசியா வளாகத்தில் இந்த ஆலோசனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வந்திருந்த அனைத்து தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பேசிய தமிழ்நாடு அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரான சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதோடு, தன்னுடைய ஆதங்கத்தைப் புலம்பித் தீர்த்து விட்டார்.

அதாவது, “உங்கள் அருகில் இருக்கும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் எங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் கடைக்கு வரும்போதெல்லாம் சண்டை போடுகிறார். ஏனென்றால் எங்களுக்கு இனிப்புகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள். உணவுக்கு 5 சதவிகிதம், காரத்துக்கு 12 சதவிகிதம், அடுத்ததாக பேக்கரி வகையில் பார்த்தால் பிரட் மற்றும் பன் தவிர மற்ற அனைத்திற்கும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள்.

வானதி சீனிவாசன் கடைக்கு வந்து முதலில் ஜிலேபி சாப்பிடுகிறார். அடுத்ததாக காபி குடிக்கும்போது காரம் தேவைப்படுகிறது. அந்த காரத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி என சொன்னால் சண்டைக்கு வருகிறார். ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு விதமான ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. ஒரு பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது.

ஆனால் பன்னுக்குள் வைக்கப்படும் கிரீமுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் டென்ஷனாகி எங்களிடம் நீங்கள் கிரீமையும் ஜாமையும் கொண்டு வாருங்கள். நாங்களே வைத்துக் கொள்கிறோம் என சொல்கிறார்கள். எங்களால் கடை நடத்த முடியல மேடம்.  எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்” எனக் கூறினார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் சீனிவாசனை இணையவாசிகள் புகழ்ந்து தள்ளினர். இதற்கிடையில் நேற்று நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போல் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

Also Read: தொடரும் விநாயகர் சதுர்த்தி சோகம்.. பெட்ரோல் ஊற்றி ஒருவர் எரித்துக்கொலை!

அந்த வீடியோவில், ”என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள். நான் எந்த கட்சியிலும் இல்லை” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ வெளியானதை அடுத்து, எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனங்களை எழுப்பினர். காங்கிர கட்சியில் ராகுல் காந்தி முதல் பலரும் ஜிஎஸ்டி வரி குறித்து பேசியதற்கு பாஜக அவரை மன்னிப்பு கோர வைத்தது என்று குற்றச்சாட்டினர்.  இந்த சூழலில் தான் அண்ணாமலை மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Latest News