Annamalai : தமிழ்நாடு திரும்பும் அண்ணாமலை.. பாஜகவின் அடுத்த கட்ட திட்டம் என்ன? - Tamil News | tamilnadu bjp chief Annamalai to return tamilnadu what are all their plans | TV9 Tamil

Annamalai : தமிழ்நாடு திரும்பும் அண்ணாமலை.. பாஜகவின் அடுத்த கட்ட திட்டம் என்ன?

அண்ணாமலை: லண்டனில் படிப்பை முடித்து வரும் நவம்பர் 28ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, கட்சி சார்ந்த பணிகளில் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Annamalai : தமிழ்நாடு திரும்பும் அண்ணாமலை.. பாஜகவின் அடுத்த கட்ட திட்டம் என்ன?

அண்ணாமலை

Updated On: 

08 Nov 2024 09:17 AM

லண்டனில் படிப்பை முடித்து வரும் நவம்பர் 28ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, கட்சி சார்ந்த பணிகளில் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி இருந்து அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அண்ணாமலை படித்து வருகிறார்.

தமிழ்நாடு திரும்பும் அண்ணாமலை

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செவனிங் உதவித்தொகை மூலம் சர்வதேச அரசியில் என்ற தலைப்பிலான படிப்பை படிப்பதற்காக லண்டன் சென்றார். இந்த படிப்பிற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதில், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.

இவர் அங்கு தங்கிப் படிப்பதற்கான மொத்த செலவையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்கள் அவர் அங்கேயே தங்கி படித்து வருகிறார்.   பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றதால், இங்கு கட்சி பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பாஜக தலைமை அமைத்தது.

தமிழக பாஜகவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பாஜகவின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. உறுப்பினராக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் கனக சபாபதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் இருந்து கட்சி பணிகளை செய்து வருகின்றனர்.

Also Read : கனமழை.. திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

அடுத்த கட்ட திட்டம் என்ன?

அண்ணாமலையில் லண்டன் படிப்பு இந்த மாதத்தில் முடிவடைய உள்ளது. இதன் மூலம் நவம்பர் 28ஆம் தேதி அண்ணாமலை தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 28ஆம் தேதி தமிழகம் வரும் அண்ணாமலை, டிசம்பர் 1ஆம் தேதி வரை கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதன்பிறகு தொடர்சசியாக, கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜகவின் ஓட்டு வங்கியை மேலும் பலப்படுத்த, கடந்த மக்களவை தேர்தலின்போது நடத்திய ’என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை போல, ஜனவரி அல்லது அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இருப்பினும், இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகலும் வெளிவரவில்லை. அண்ணாமலை லண்டன் சென்றதால் பாஜக சில மாதங்களாகவே அமைதியான போக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், அண்ணாமலை இன்று மாத இறுதியில் தமிழ்நாடு திரும்பும் நிலையில், என்னென்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : விஜய்யை மறைமுகமாக விமர்சித்த துணை முதலமைச்சர்.. சொன்னது என்ன?

விஜய்க்கு பதில் கொடுப்பாரா அண்ணாமலை?

குறிப்பாக, தமிழக அரசியலில் நடிகர் விஜய் களத்தில் இருக்கிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாட்டை நடத்தி முடித்தார். இதில் விஜய்யின் பேச்சுகளும், அவரது கொள்கைகளும் தமிழக அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் விஜய் திட்டவட்டமாக கூறினார். அதே நேரத்தில் திராவிடமும், தமிழ்த்தேசியமும் தனது இரு கண்கள் என்று கூறினார். இது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியது.

இதற்கு பாஜகவின் எச்.ராஜா, தமிழிசை பதிலடி கொடுத்து இருந்தாலும், அண்ணாமலை லண்டனில் இருந்ததால் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.  எனவே, அண்ணாமலை இந்த மாத இறுதியில் தமிழகம் திரும்பிய பின் இவற்றுக்கு எல்லாம் பதில் கருத்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இதை பண்ணுங்க
குழந்தைகள் வாழ்வில் ஹீரோவாக தெரியும் அப்பா! - ஏன் தெரியுமா?
வாழ்க்கையை வளமாக மாற்ற எளிய டிப்ஸ் இதோ!
உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்க உதவும் வெள்ளரி..!