5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தல்..

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையன்று திரையறங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.

அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு..  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தல்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Nov 2024 12:37 PM

சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்திற்கு பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க துடிக்கும் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளை போற்றுபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையன்று திரையறங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.

அடிப்படைவாதிகளை கிள்ளி எறிய வேண்டும்:

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளை ‘மண்ணுரிமைப் போராளிகள்’ என்று போற்றுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ‘அமரன்’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தமிழ்நாட்டு மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அனைத்து இடங்களிலும் குடும்பம் குடும்பமாக இந்த திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். கடந்த அக்டோபர் 30-ம் தேதி அமரன் திரைப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

Also Read: தமிழ்நாட்டிற்கு முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் தியாக வரலாறு, தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ஆழமாக சென்று சேருவதையும், மக்களிடம் தேசபக்தி பொங்கி எழுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில சக்திகள், ‘அமரன்’ திரைப்படத்திற்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளனர். சில அடிப்படைவாத அமைப்புகள் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்ணுயிர் போராளிகள்:

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவுள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வெளியிட்ட அறிக்கையில்,”அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.

மண் உரிமைக்கும் தன்னுரிமைக்கும் ஜனநாயக வழியில் போராடியவர்கள் பலர் சீருடைகளில் ஒளிந்துள்ள மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர். தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ அது போல தான் காஷ்மீர் மக்கள் தங்கள் மண்ணின் உரிமைக்காக போராடுகிறார்கள்” என கூறியிருக்கிறார்.

Also Read: வார இறுதி நாள்.. குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

ஜவாஹிருல்லாவிற்கு கண்டனம் தெரிவித்த வானதி ஸ்ரீனிவாசன்:

இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. இப்போது இந்தியாவிடம் உள்ள காஷ்மீரை அபகரிக்க துடிக்கும் பயங்கரவாதிகளையும், இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடும் பிரிவினைவாதிகளையும் மண்ணுரிமைப் போராளிகள் என்றும், தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ அது போல தான் காஷ்மீர் மக்கள் தங்கள் மண்ணின் உரிமைக்காக போராடுகிறார்கள் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றுள்ள ஜவாஹிருல்லா கூறுவது கடும் கண்டனத்துக்குரியது, திமுக எம்.எல்.ஏ.வாக உள்ள அவரது இந்த கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியையும், சட்டம் ஒழுக்கையும் சீர்குலைக்க சில அடிப்படைவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு வன்முறைக்காடாகி விடும் கோவை கலவரத்தால் ஏற்பட்ட இழப்புகளை மறுங்க வேண்டாம் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Latest News