5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெளியே வந்த செந்தில் பாலாஜி.. விரையில் அமைச்சரவை மாற்றமா? திமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்!

Senthil Balaji: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை செந்தில் பாலாஜி ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

வெளியே வந்த செந்தில் பாலாஜி.. விரையில் அமைச்சரவை மாற்றமா? திமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்!
செந்தில் பாலாஜி (picture credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Sep 2024 18:29 PM

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை செந்தில் பாலாஜி ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும் என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

ஆனால், அதற்கான எந்த ஒரு அறிவிப்பு இப்போது வரை வெளிவரவில்லை. இப்படியான சூழலில் செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ளார். இதனால் திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை காலம் செந்தில் பாலாஜிக்காகவே அமைச்சரவை மாற்றம் நடக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் தற்போது செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இந்த மாதத்திலேயே அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிதித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, போக்குவரத்துத்துறை, வருவாய் நிர்வாக துறைட வனத்துறை, சட்டத்துறை, மின்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மாற்றமோ அல்லது துறையில் வேறு ஒரு அமைச்சருக்கு மாற்றத் தருவதோ நடைபெறலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: மழைக்கு ரெடியா? அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

ஸ்டாலின் எடுக்கப்போகும் முக்கிய முடிவு:

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.  தற்போது மின்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்து வரும் நிலையில்,  அவரு வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் செந்தில் பாலாஜிக்கே மின்துறை ஒதுக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இன்று மெட்ரோ நிதி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று திரும்பியவுடன் அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.  மேலும், டெல்லி சென்று திரும்பியவுடன் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கலாம். எனவே, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும், செந்தில் பாலாஜிக்கு மின்துறையும் கொடுக்கப்படலாம். மேலும், பிடிஆருக்கு வெயிட்டான துறையை தர இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

செந்தில் பாலாஜி வெளியே வருவது எப்போது?

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 15 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் தற்போடு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி மீது 300 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டு காலமாக அவருக்கு ஜாமின் வழங்காமல் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

ஜாமின் தொடர்பாக பேசிய வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, “ செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: தனியாக நின்ற கார்.. உள்ளே 5 பேரின் சடலம்.. கடன் பிரச்சனையால் நடந்த கொடூரம்..

அதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இருவர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும். வாரத்த்தில் இரண்டு தினங்கள் – திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது; வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் நகல் கிடைத்தவுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை வெளியே வர அனுமதிக்கும். இதன்படி, செந்தில் பாலாஜி இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது.

Latest News