Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவையில் முந்திய உதயநிதி.. சீனியர்களை பின்னுக்கு தள்ளிய துணை முதல்வர் பதவி!
Deputy CM Udhayanidhi: தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு கடந்த 28ஆம் தேதி வெளியானது.
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு கடந்த 28ஆம் தேதி வெளியானது. இதில், இதில் மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையில், கோவை செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், செந்தில் பாலாஜி மற்றும் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் முந்திய உதயநிதி:
அதேவேலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். எனவே, தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 4 புதிய அமைச்ர்களுக்கு பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட் இடம் குறித்தத விவரங்கள் வெளியாகி உள்ளது.
Also Read: சென்னையில் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ரூட் தெரியுமா? செக் பண்ணுங்க!
அதன்படி, தமிழக அமைச்சரவையில் முதலில் மு.க.ஸ்டாலின் உள்ள நிலையில், மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு உதயநிதிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
அப்போது, அவருக்கு அமைச்சரவையில் 10வது இடம் அளிக்கப்பட்டு இருந்தது. அதாவது மூத்த அமைச்சர்களின் பெயருக்கு பின்னால் உதயநிதி பெயர் 10வது இடத்தில் இருந்து. தற்போது, மூத்த அமைச்சர்களுக்கு முன்பு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.
மற்ற அமைச்சர்கள் என்ன இடம்?
அப்போது அமைச்சரவை இடம் தொடர்பாக தமிழக அரசின் இணையதளத்தில் பட்டியல் வெளியானது. அதில், முதல்வருக்கு அடுத்த இடத்தில் துணை முதல்வரான ஸ்டாலினுக்கும், அவருக்கு அடுத்தப்படியாக மூத்த அமைச்சர் க.அன்பழகனுக்கும் இடம் தரப்பட்டிருந்தது. இதை அறிந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, இரண்டாவது இடம் க.அன்பழகனுக்கும், மூன்றாவது இடத்தை துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் வழங்கினார்.
இப்போது இதுபோன்ற நிலை உருவாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதல்வர், 2வது இடத்தை துரைமுருகனுக்கும், 3வது இடத்தை உதயநிதிக்கும் வழங்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து, கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் உள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களுடன், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையிலான அமைச்சரவை, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது. pic.twitter.com/GUqjzQ7Zrl
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 29, 2024
மேலும், மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 21வது இடமும், நாசருக்கு 29வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அமைச்சர்களாக பதவியேற்ற உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு 27வது இடமும், ராஜேந்திரனுக்கு 19வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தங்கம் தென்னரசு, ரகுபதி, முத்முசாமி, பெரியகருப்பன், சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், சேகர்பாபு, சிவசங்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.
Also Read: மதுரையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய் சோதனையில் நடந்தது என்ன?
மூன்றாவது துணை முதல்வர்:
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சி அமைத்து 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல் துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் 2009ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். ஓராண்டு 351 நாட்கள் துணை முதல்வராக பணியாற்றினார். அதற்கு பிறகு, அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பு வகிக்க, துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அவர் 3 ஆண்டுகள் 258 நாட்கள் அந்த பொறுப்பில் இருந்தார். அவர்களுக்கு பிறகு, மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று உள்ளார்.