5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video: காவலர்களை ஆபாசமாக பேசிய காதல் ஜோடி.. 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.. நடந்தது என்ன?

இருவரையும் வேளச்சேரியில் இருக்கும் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்துள்ளனர். அப்போது, என்னை என் பிள்ளைகள் முன்னிலையில் அழைத்து வந்து விட்டீர்கள். இதற்கான தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள்? நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் அடித்தீர்கள் என போலீசார் முன்பு அழுதுகொண்டே கதறியுள்ளார்.

Viral Video: காவலர்களை ஆபாசமாக பேசிய காதல் ஜோடி.. 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.. நடந்தது என்ன?
கைது செய்யப்பட்டவர்கள்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Oct 2024 20:06 PM

நேற்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில், நேற்று நள்ளிரவு வாகனங்களை எடுக்கச்சொல்லி காவலர்கள் சந்திரமோகன் மற்றும் அவரது தோழியை அறிவுறுத்தியுள்ளனர். அப்போது காவலர்களை தகாத வார்த்தையிலும், ஆபாச வார்த்தையிலும் பேசிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.


இதனை அடுத்து, சென்னை மெரினா லூப் சாலையில் காவலர்களை ஆபாசமாக பேசி மிரட்டிய விவகாரம் தொடர்பாக காவலர் சிலம்பரசன் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதாவது, நள்ளிரவில் மெரினாவில் லூப் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றும் படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது சந்திர மோகன் என்பவரை வாகனத்தை எடுக்கச்சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். அப்போது அவர், “நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பாக்குறியா” என பேசியதோடு, “உன்னால் முடிந்ததை பாரு.. நான் குடித்து தான் இருக்கேன்.. என்னால் காரை எடுக்க முடியாது.. நாளை காலையில உங்க அட்ரஸ் எடுத்து எல்லாத்தையும் காலி பண்ணி விடுவேன்” என மிரட்டி உள்ளார்.

Also Read: நாளை முக்கிய மாவட்டங்களில் 5 மணி நேர மின் தடை.. உங்க ஏரியாவில் எப்படி?

மேலும், ஆபாசமாக தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதனடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பணி செய்யவிடாமல் ஆபாசமாக பேசி மிரட்டியதாக மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி வந்த நிலையில் இருவரையும் கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருவரையும் வேளச்சேரியில் இருக்கும் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்துள்ளனர். அப்போது, என்னை என் பிள்ளைகள் முன்னிலையில் அழைத்து வந்து விட்டீர்கள். இதற்கான தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள்? நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் அடித்தீர்கள் என போலீசார் முன்பு அழுதுகொண்டே கதறியுள்ளார்.

Also Read:  இன்று தொடங்கியது பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!

15 வருடங்களாக இருவரும் தகாத உறவில் இருந்து வருவதாகவும், தினமும் மெரினாவில் காரில் வந்து குடிப்பதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணம் நடைபெற்று பிள்ளைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. துணை முதலமைச்சரின் பெயரை தவறுதலாக கூறிவிட்டதாகவும் சந்திரமோகன் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். சந்திரமோகன் வேளச்சேரியில் காரை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து தொழில் நடத்தி வருவதாக விசாரணையில் தெரிவந்துள்ளது.

அதன் பின்னர், தான் குடி போதையில் இருந்ததால் தான் பேசுவது தெரியாமல் பேசிவிட்டதாகவும், மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் இனி ஒருபோது காவலர்களை எப்போது மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

Latest News