5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CM MK Stalin: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ உங்கள் மண்ணின் மைந்தன் அன்னியூர் சிவா, தடம் மாறாத நிறம் மாறாத கலைஞரின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர். அவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுத்து அனுப்பி வையுங்கள் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

CM MK Stalin: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!
முதலமைச்சர் ஸ்டாலின்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Jul 2024 10:15 AM

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த தொகுதியில் வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக தரப்பில் அன்னியூர் சிவா, பாஜக தரப்பில் பாமகவை சேர்ந்த சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு மும்முணை போட்டி நிலவுகிறது.


தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ உங்கள் மண்ணின் மைந்தன் அன்னியூர் சிவா, தடம் மாறாத நிறம் மாறாத கலைஞரின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர். அவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுத்து அனுப்பி வையுங்கள் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Also Read:  இந்திய வீரர்கள் கோப்பையுடன் பேரணி.. கொட்டும் மழையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..

மாதந்தோறும் மகளிருக்கு ரூ. 1000 என்பது தற்போது மேலும் ஒரு லட்சம் மகளிருக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை. இப்படி அரசு குடும்பங்களுக்கு எதாவது ஒரு வகையில் உதவி செய்து வருகிறது. திராவிட மாடல் அரசு என்றாலே சமூகநீதி அரசு. வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர், இந்த மாதம் கூடுதலாக 1.48 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற உள்ளனர். பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் சமூக நீதிக்கு துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” என குறிப்பிட்டு பேசியுள்ளார். வழக்கமாக நேரில் சென்று வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர் இம்முறை வீடியோ மூலம் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு வாக்களிக்குமாறு  வலியுறுத்தி வாக்கு சேகரித்துள்ளார்.

Also Read:  இன்றைய பஞ்சாங்கம்.. அமாவாசை இன்று.. நல்ல நேரம் விவரங்கள்!

Latest News