Tamilnadu Cabinet Reshuffle: இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்.. அமைச்சர் உதயநிதியின் அரசியல் பயணம்..
இளைஞரணி செயலாராக இருந்து உதயநிதி ஸ்டாலின் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார். இப்படி தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் பல நாட்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயம் வெறும் வாய் வார்த்தையாக இருந்து வந்த நிலையில் நேற்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியானது. அதாவது தமிழ்நாடு அமைச்சரவையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் பரவி வந்த நிலையில், நேற்று மாலை அமைச்சரவையில் மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, தமிழக அமைச்சரவையில் மூன்று அமைச்சரவையில் நீக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் அவர்களுக்கு பதில் நான்கு பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புதிய துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அமைச்சர்களாக இருந்த செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், கோவை செழியன், ராஜேந்திரன் ஆகிய புது முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. மேலும், செந்தில் பாலாஜி மற்றும் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொன்முடிக்கு உயர்கல்வித்துறையில் இருந்து வனத்துறையும் மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சரான மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்படுத்த நலத்துறை மாற்றப்பட்டுள்ளது.
உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுககு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழிக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்:
2019 ஆம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்த ஊராட்சி கூட்டங்களை பல மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தினார். மேலும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடைய பிரச்சாரங்கள் பெரிதும் பேசப்பட்டது. பின்னர் 2019 ஆம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலினால் அவர் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். உதயநிதி பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இளைஞரணி செயலாராக இருந்து உதயநிதி ஸ்டாலின் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார். இப்படி தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க: 3 அமைச்சர்கள் நீக்கம்.. 2 பேருக்கு வாய்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி கவிழ்ந்து திமுக ஆட்சி கைப்பறியது. அப்போது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை. அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியை மேற்கொண்டார். பின்னர் 2022 ஆம் ஆண்டு அமைச்சரவையில் மேற்கொண்ட மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் துணை முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை சக அமைச்சர்களால் முன் வைக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வலுத்துள்ளது தவிர, பழுக்கவில்லை என சூசகமாக பதிலளித்தார். இதுவே அமெரிக்கா சென்று திரும்பிய போது கேட்கப்பட்ட கேள்விக்கு மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. யார் யாருக்கு என்ன பதவி?
இப்படி பல நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்து வந்தது. அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மு.க ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அவரது அமைச்சரவையில் ஓ.பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். தற்போது திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி முன் பதவியேற்க உள்ளார்.