5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

” ஜோசியராக மாறிய எடப்பாடி பழனிசாமி, திமுகவில் ஒருபோதும் விரிசல் இருக்காது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

திமுக கூட்டணி உடைய போகிறது என்ற கற்பனையில் பேசிக் கொண்டிருந்தார். இப்போது ஜோசியராகவே மாறிவிட்டார். எப்போது ஜோசியராக மாறினார் என்று தெரியவில்லை அவர் விரக்த்தியின் எல்லைக்கே போய்விட்டார். தனது கட்சியை பார்க்க யோக்கிதையில்லை. வளர்ந்து மக்கள் மத்தியில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் திமுகவை பார்த்து சொல்கிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

” ஜோசியராக மாறிய எடப்பாடி பழனிசாமி, திமுகவில் ஒருபோதும் விரிசல் இருக்காது”  – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Oct 2024 13:27 PM

செல்லா காசாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் எல்லைக்கே சென்று திமுகவை விமர்சிப்பதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல அடுத்து வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் வேணு இல்லத்திருமண விழா நடைபெற்றது. இத்திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து விழ மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தும் வாய்ப்புற்றுமைக்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இது நம்முடைய குடும்ப திருமணம், கழக குடும்ப திருமணம் என்றார். மிசா சட்டத்தில் எங்களுடன் கைதாகி இருந்த போது பாதுகாவலராக, நண்பராக விளங்கியவர் வேணு என்றும் இவரின் திருமணம் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. இன்று அவரின் பேரன் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டார்.

Also Read: இன்னும் 4 நாட்கள் தான்.. த.வெ.க மாநாட்டில் விஜய் பேசப்போவது என்ன? வெளியான முக்கிய தகவல்..

நடந்து முடிந்த முப்பெரும் விழாவில் கலைஞர் விருதை வேணுவுக்கு தான் வழங்கினோம், உடல்நலம் சரியில்லாத போதும் வந்து நேரில் வாங்கினார். அதனால் திமுகவை பொறுத்தவரை மக்கள் பணியாற்றுவதில் சிறந்து விளங்கி வருகிறோம்.மக்களுக்காக உறுதிமொழிகளை மட்டுமல்லாமல், தராத வாக்குறுதிகளையும், சாதனைகளையும் திமுக செய்து வருகிறது என்றார்.

மக்களால் போற்றப்படும் ஆட்சியை திமுக செய்து வருகிறது. ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் செல்லாக்காசாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சி சரிந்து கொண்டிருப்பதாக பொறாமையில் பேசிக் கொண்டிருக்கிறார். எங்கள் கூட்டணி பதவிக்கோ தேர்தலுக்கான கூட்டணி அல்ல கொள்கைக்காக உருவான கூட்டணி என்பதை மறந்து விடக்கூடாது எனறார்.

திமுக கூட்டணி உடைய போகிறது என்ற கற்பனையில் பேசிக் கொண்டிருந்தார். இப்போது ஜோசியராகவே மாறிவிட்டார். எப்போது ஜோசியராக மாறினார் என்று தெரியவில்லை அவர் விரக்த்தியின் எல்லைக்கே போய்விட்டார். தனது கட்சியை பார்க்க யோக்கிதையில்லை. வளர்ந்து மக்கள் மத்தியில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் திமுகவை பார்த்து சொல்கிறார்.

Also Read: தீபாவளி சிறப்பு ரயில்கள் டிக்கெட் முன்பதிவு.. நிமிடங்களில் காலியான டிக்கெட்டால் அதிர்ச்சியில் மக்கள்..

எதிர்க்கட்சியா இருந்தாலும் மழையில் மக்களை சந்தித்தோம். இன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் மக்களை சந்தித்து என்ன தேவைகள் என்பதை அறிந்து செய்து கொண்டிருக்கிறோம். சென்னையில் மழை வந்ததும் நான் சென்றேன், துணை முதலமைச்சர் சென்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் சென்று குறைகளை கேட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தோம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடியவர் தான் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஆட்சியில இருந்தாலும் வரமாட்டார், ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் வர மாட்டார். ஏதோ கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி சோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணி என்றால் கொள்கைக்கான கூட்டணி மட்டுமல்ல, மக்களுக்கான கூட்டணியாகவும் இருந்து கொண்டிருக்கிறது. கனவு காண வேண்டாம் 2026 மட்டுமல்ல அடுத்தவரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று முதலமைச்சர் தெரிவித்தார். திருமண விழாவில் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என். நேரு பொன்முடி மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Latest News