Chennai Rains: சென்னை வெள்ளம்… விரைவில் நிரந்தர தீர்வு என முதல்வர் உறுதி! - Tamil News | TamilNadu CM MK Stalin says a permanent solution to the floods in Chennai is soon | TV9 Tamil

Chennai Rains: சென்னை வெள்ளம்… விரைவில் நிரந்தர தீர்வு என முதல்வர் உறுதி!

CM MK Stalin: கடந்த 3 மாதங்களாக பருவமழை பாதிப்பு தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்து ஆட்சிக்கு வந்தபோதே அதற்கான பணிகளில் களமிறங்கினோம். அந்த கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக பண்ணிக் கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chennai Rains: சென்னை வெள்ளம்... விரைவில் நிரந்தர தீர்வு என முதல்வர் உறுதி!

கோப்பு புகைப்படம்

Updated On: 

16 Oct 2024 16:32 PM

முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு: சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்ற மழைநீர் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதாவது மழைநீர் வடிகால் பணிகள் அரசுக்கு கைக்கொடுத்திருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, “நிச்சயமாக, உறுதியாக நம்புகிறேன். நான் சொல்வதை விட மக்கள் கிட்ட போய் கேட்டுப் பாருங்கள். அப்போது தெரியும்” என தெரிவித்தார். தொடர்ந்து 20 செ.மீ., மழை பெய்துள்ளது.  மேலும் மழை வரும் என சொல்லியிருக்கிறார்களே?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

Also Read: Karunakaran: நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு.. பணிப்பெண் கைது!

அதற்கு, “ ஏற்கனவே கடந்த 3 மாதங்களாக பருவமழை பாதிப்பு தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்து ஆட்சிக்கு வந்தபோதே அதற்கான பணிகளில் களமிறங்கினோம். அந்த கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக பண்ணிக் கொண்டிருக்கிறோம். ஒரேடியாக செய்ய முடியாது. இன்னும் 25 முதல் 30 சதவிகித பணிகள் பாக்கியுள்ளது. அதையும் வரக்கூடிய காலக்கட்டத்தில் முடித்து விடுவோம். வெள்ளத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையின் புறநகர் பகுதி மக்களுக்கும் விரைவில் நிரந்தர தீர்வு அளிக்கப்படும்” என தெரிவித்தார்.

Also Read: Tamilnadu Weather Alert: சென்னைக்கு அருகே நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கொட்டப்போகும் மழை..

மேலும் தூய்மைப்பணியாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் என யார், யார் வெள்ளத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் சென்னை மாநகர மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி.,  உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை, வேளச்சேரி இரயில்வே ஆறுகண் கல்வெட்டு பகுதியில் உள்ள வீராங்கால் ஓடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், நாராயணபுரம் ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் ஏரிக்கரையினை பலப்படுத்தும் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

மேலும் சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திடமிருந்து மீளப்பெறப்பட்ட நிலத்தில் ஏற்கனவே உள்ள 3 குளங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலமாக ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் புதிதாக 4 குளங்கள் வெட்டும் பணிகளும் நடந்து வருகிறது. அதனையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!