Tamil Nadu Day : ‘தமிழ்நாடு’ என பெயர் வந்தது இப்படித்தான்.. தமிழ்நாடு நாள் வரலாறு தெரியுமா? - Tamil News | | TV9 Tamil

Tamil Nadu Day : ‘தமிழ்நாடு’ என பெயர் வந்தது இப்படித்தான்.. தமிழ்நாடு நாள் வரலாறு தெரியுமா?

Published: 

18 Jul 2024 12:01 PM

கடந்த 1955 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட செயற்குழுவில் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென தீர்மானம் முன்மொழியப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயரை வைக்க அனைத்து கட்சிகளின் சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு என பெயர் மாற்றன் செய்ய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியின் சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்ந்து உயிர் தியாகம் செய்தார். இது தமிழ்நாடு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏறப்டுத்தியது.

Tamil Nadu Day : தமிழ்நாடு என பெயர் வந்தது இப்படித்தான்.. தமிழ்நாடு நாள் வரலாறு தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Follow Us On

தமிழ்நாடு தினம்: தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு இன்றுடன் 57 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. அதற்கு முன்புவரை, மெட்ராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டு வந்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகே, நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என மாற்றப்பட்டது. கடந்த 1955 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட செயற்குழுவில் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென தீர்மானம் முன்மொழியப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயரை வைக்க அனைத்து கட்சிகளின் சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு என பெயர் மாற்றன் செய்ய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியின் சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்ந்து உயிர் தியாகம் செய்தார். இது தமிழ்நாடு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏறப்டுத்தியது.

இதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இறுதியாக 1961 ஆம் ஆண்டு தமிழில் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் எழுத தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என எழுதப்பட வேண்டும் என திமுக தரப்பில் வலுயுறுத்தப்பட்டது.

Also Read: கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பிறந்தநாள் இன்று.. நேஷனல் க்ரஷ் ரெக்கார்ட் லிஸ்ட் இதோ!

6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா தலைமையில் ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 1967ஆம் ஆண்டு, ஜூலை 18ஆம் தேதி, அனைத்து கட்சி ஆதரவுடன் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. கடந்த 1969ஆம் ஆண்டு, ஜனவரி 14ஆம் தேதி, தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டது.


இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “ கடல் கண்டு மலை கண்டு பெயர் கண்ட தமிழ்நாடு வாழ்க. களம் கண்டு கலை கண்டு கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18 தமிழ்நாடு நாள். தமிழ்நாடு என சொல்லும் போதே மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க” என தெரிவித்துள்ளார்.

Also Read: 40செமீ வரை கனமழை.. வெள்ளக்காடான நீலகிரி.. வீடுகளில் புகுந்த மழை நீர்!

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version