School Leave: தொடரும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?
Leave Announcement: இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை: தென் மேற்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்கள் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் இன்றும் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நேற்றும் கனமழை காரணமாக இந்த இரண்டு தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: சாதிவாரி கணக்கெடுப்பு.. பிரதமர் மோடிக்கு பறந்த முதல்வர் ஸ்டாலினின் கடிதம்!