Tamil Nadu Election Result 2024 Highlights : மொத்தமாக அள்ளிய திமுக… மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை
Tamil Nadu Lok Sabha Election Results 2024 Highlights: மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட இடங்களில் நடக்கிறது. தமிழகத்தில் அதிக வெற்றிகளை பிடித்து எந்தக்கட்சி டாப் என இன்று மாலைக்குள் தெரியவரும். திமுக, அதிமுக, பாஜக, நாதக என 4 முனை போட்டியாக இது உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வாக்கு எண்ணிக்கை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்குகிறது. 39 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் அதிக வெற்றிகளை பிடித்து எந்தக்கட்சி டாப் என இன்று மாலைக்குள் தெரியவரும். திமுக, அதிமுக, பாஜக, நாதக என 4 முனை போட்டியாக இது உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 ஆயிரம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீசாருக்கு அடுத்தபடியாக 2வது அடுக்காக மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3வது அடுக்காக உள்ளூர் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டுள்ளனர்.
LIVE NEWS & UPDATES
-
40 -40 என மொத்தத்தையும் அள்ளிய திமுக
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இந்த தேர்தலில் திமுக இந்தியாவுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளது. போட்டியிட்ட 40 தொகுதிகளையும் திமுக கூட்டணியே வே வென்றுள்ளது. இந்த வெற்றி INDIA கூட்டணிக்கு மிகப்பெரிய உதவியாகவும் அமைந்துள்ளது
-
Tamil Nadu Election Result 2024 : தயாநிதி மாறன் வெற்றி
மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் வெற்றிப்பெற்றுள்ளார்.
-
-
Tamil Nadu Election Result 2024 : நாமக்கல்லில் மாதேஸ்வரன் வெற்றி
நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக கொங்கு மக்கள் தேசிய கட்சி நிர்வாகி மாதேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெற்றி
தென்காசி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராணிஸ்ரீகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : கிருஷ்ணகிரியில் காங். வேட்பாளர் கோபிநாத் வெற்றி!
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கோபிநாத் வெற்றி பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தூத்துக்குடியை மீண்டும் கைப்பற்றிய கனிமொழி
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தலில், திமுக வேட்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : திமுக டி.ஆர். பாலு வெற்றி
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர். பாலு வெற்றி பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : நாகப்பட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி
நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : கரூரில் ஜோதிமணி வெற்றி!
கரூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி!
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபண்டியன் வெற்றியடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தோல்வியடைந்தார்.
-
Tamil Nadu Election Result 2024 : கள்ளக்குறிச்சியில் திமுக மலையரசன் வெற்றி
கள்ளக்குறிச்சியில் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.மலையரசன் வெற்றிபெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் வெற்றி!
திருப்பூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தேனியில் வெற்றியை பதிவு செய்தார் தங்க தமிழ்செல்வன்
தேனி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட டிடிவி தினகரனை தோற்கடித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : பொள்ளாச்சியில் மீண்டும் திமுக வெற்றி
அதிமுகவின் கேட்டையாக இருந்து வந்த பொள்ளாச்சியில் கடந்த மக்களவை தேர்தலில் தனது வெற்றியை பதிவு செய்தது திமுக. இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்ட ஈஸ்வர சுவாமி வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வெற்றி!
காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம் தனது மாபெறும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : திருவண்ணாமலையில் திமுக வெற்றி!
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : வேலூரில் கதிர் ஆனந்த் வெற்றி!
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : கோவையில் தோல்வியை சந்தித்த அண்ணாமலை
கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படுதோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 4,64,128 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : வெற்றியை பதிவு செய்தார் கார்த்திக் சிதம்பரம்
சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : திருச்சியில் வெற்றியை பதிவு செய்தார் துரை வைகோ
திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மாதிமுக வேட்பாளர் துரை வைகோ தனது மாபெறும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : விசிக தலைவர் திருமாவளவன் வெற்றி!
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது மாபெறும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : நாகப்பட்டினத்தில் சிபிஐ வேட்பாளர் வெற்றி
நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி
பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் தோல்வி அடைந்தார்.
-
Tamil Nadu Election Result 2024 : திமுக கூட்டணி 40 – 40 வெற்றி – முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நன்றி
கடந்த மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக வெற்றிப்பெற்ற நிலையில் 2024-ம் ஆண்டிற்கான இந்த தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றியை தலைவர் கலைஞருக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தஞ்சாவூரில் திமுக வெற்றி!
தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார். 4,69,232 வாக்குகள் பெற்று இவர் வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : கடலூரில் காங்கிரஸ் வெற்றி!
கடலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.கே.விஷ்ணு பிரசாத் வெற்றிப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்தும் போட்டியிட்ட பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சன் தோல்வியடைந்தார்.
-
Tamil Nadu Election Result 2024 : விசிக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி
விழுப்புரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார் மீண்டும் வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : கன்னியாகுமரியில் வசந்த் ரவி வெற்றி
கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்த் ரவி வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : வாக்குறிதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் – சௌமியா அன்புமணி
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி என 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றிப்பெற்ற திமுக, கொடுத்த வாக்குறிதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். இவர் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
-
Tamil Nadu Election Result 2024 : நீலகிரியில் ஆ.ராசா மாபெறும் வெற்றி
நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றியடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருனை விட 2.40 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : வடசென்னையில் கலாநிதி வீராசாமி வெற்றி
வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தனது வெற்றியை இரண்டாவது முறையாக பதிவு செய்துள்ளார். கடந்த முறையும் வட சென்னையில் கலாநிதி வீராசாமி வெற்றியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Tamil Nadu Election Result 2024 : திமுகவின் பணிகளால் வெற்றி அறுவடை – கமல்
திமுக அரசு செய்து காட்டிய பணிகளால் அதன் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றியை அறுவடை செய்துள்ளது என நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : கடலூரில் தங்கர் பச்சன் தோல்வி
கடலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக கட்சி வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சன் தோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் வெற்றியடைந்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : திருவள்ளுரில் சசிகாந்த செந்தில் வெற்றி!
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சசிகாந்த செந்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி
புதுச்சேரி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 2,98,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : ராமநாதபுரத்தில் நவாஸ் கனி வெற்றி
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிப்பெற்றுள்ளார். ஓபிஎஸ் தோல்வியை சந்தித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தருமபுரியில் தோல்வியை சந்தித்தார் சௌமியா அன்புமணி
தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 3,89,837 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை விட 18,524 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : திண்டுகல்லில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி
திமுக கூட்டணியில் திண்டுகல் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : மதுரையில் 2.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சு.வெங்கடேசன் வெற்றி
மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : விருதுநகரில் விஜய பிரபாகரன் தொடர் பின்னடைவு
விருதுநகரில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுக வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் உள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தென்சென்னையில் தமிழச்சி முன்னிலை – தமிழிசை பின்னடைவு
தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடர்ந்து முன்னிலை வகுக்கும் நிலையில் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
-
Tamil Nadu Election Result 2024 : ராமநாதபுரத்தில் நவாஸ் கனி முன்னிலை
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தருமபுரியில் மணி முன்னிலை – சௌமியா அன்புமணி பின்னடைவு
தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 3,81,049 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,61,381 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தமிழ்நாடு – புதுச்சேரி… 40 தொகுதிகளிலும் திமுக முன்னிலை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் தற்போது திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதனை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
-
Tamil Nadu Election Result 2024 : விழுப்புரத்தில் தொடர்ந்து ரவிக்குமார் முன்னிலை
விழுப்புரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
-
Lok Sabha Election 2024 Result: மோடி அலை என்பது மாயை – திருமாவளவன்!
விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதியின் வேட்பாளருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மோடி அலை வட இந்தியாவில் இல்லை, மோடி அலை என்பது மாயை என அவர் தெரிவித்துள்ளார்.
-
Lok Sabha Election 2024 Result: தமிழகத்தில் 2-ம் இடம் யாருக்கு?
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 29 இடங்களில் இரண்டாவது இடத்திலும், பாஜக கூட்டணி 10 இடங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
-
Lok Sabha Election 2024 Result: 40-க்கு 40 தொகுதியிலும் முன்னிலையில் இருக்கும் திமுக கூட்டணி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி தற்போது 40 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
-
Lok Sabha Election 2024 Result: தேனியிப் பின்னடைவ சந்தித்த டிடிவி தினகரன்
தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வனை விட குறைவான வாக்குகளைப் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : மதுரையில் சு.வெங்கடேசன் வெற்றி
மதுரையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 3.61.287 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.
-
மதுரையில் தொடர்ந்து முன்னிலையில் சு.வெங்கடேசன்!
மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சிபிம் சு.வெங்கடேசன் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தருமபுரியில் சௌமியா அன்புமணி மீண்டும் முன்னிலை!
தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் மணி மற்றும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியிடையே நிலவிய கடும் போட்டியில் தற்போது சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார்
-
Tamil Nadu Election Result 2024 : கோயம்புத்தூரில் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவு
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கோயம்புத்தூரில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவில் உள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தொடர்ந்து முன்னிலை வகிக்கும் கனிமொழி
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் சுமார் 2,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
-
Tamil Nadu Election Result 2024 : தர்மபுரியில் பாமக – திமுக இடையே நிலவும் கடும் போட்டி
தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி மற்றும் திமுக வேட்பாளர் மணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் 4898 வாக்குகள் முன்னிலை வகுக்கிறார் சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா தியானம்
விருதுநகர் மக்களவை தொகுதியில் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 4575 வாக்குகள் விஜய பிரபாகர் பின்னிலையில் உள்ள நிலையில் மகன் வெற்றி பெற வேண்டி விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா தற்போது தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : திண்டுகல்லில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் சிபிஎம்
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் திண்டுகல்லில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் காலையில் இருந்தே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
-
Lok Sabha Election 2024 Result: முதல்வர் நிதிஷ்குமாரை நேரில் சந்திக்க வந்த சாம்ராட் சவுத்ரி
பீகார் பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி முதல்வர் நிதிஷ் குமாரை நேரில் சந்திக்க வந்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : மத்திய சென்னையில் தயாநிதி மாறன் முன்னிலை – மனோஜ் பி செல்வம் பின்னடைவு
மத்திய சென்னை மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மனோஜ் பி செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : நீலகிரியில் அ.ராசா முன்னிலை… எல்.முருகன் பின்னடைவு
நீலகிரி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : கன்னியாகுமரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் விஜய் வசந்த்
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணியில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காலையில் இருந்தே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : கனிமொழிக்கு வெற்றி முகம்!
தூத்துக்குடி மாவட்டம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 2,89,925 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மீண்டும் தூத்துக்குடி எம்பியாக கனிமொழி ஆக உள்ளார் என திமுகவினர் கொண்டாட்டம்.
-
Tamil Nadu Election Result 2024 : நெல்லையில் 974 தபால் வாக்குகள் செல்லாது என அறிவிப்பு!
தமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் நெல்லையில் 974 தபால் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Tamil Nadu Election Result 2024 : தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக கூட்டணி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் திமுக தொடர்ந்து 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் முன்னிலை வகுக்கிறது.
-
Tamil Nadu Election Result 2024 : விருதுநகரில் பின்னடைவை சந்தித்த விஜய பிரபாகர்!
விருதுநகரில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரும் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகர் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் உள்ளார்
-
Tamil Nadu Election Result 2024 : மீண்டும் 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் திமுக!
தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் தற்போது மீண்டும் திமுக கூட்டணி கட்சிகள் 39 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது
-
Tamil Nadu Election Result 2024 : விருது நகரில் காங். – தேமுதிக இடையே கடும் போட்டி!
விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி நிலவுறகது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகிக்கும் நிலையில் யார் வெற்றிபெறுவார் என்று கணிப்பது கடினமாக உள்ளது.
-
Tamil Nadu Election Result 2024 : தமிழகத்தில் 2-ம் இடத்தில் பாஜக பிரபலங்கள்
தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில், கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் ஆகிய பாஜகவின் பிரபல வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
-
Tamil Nadu Election Result 2024 : தமிழகத்தில் பாஜக – அதிமுக நிலை என்ன?
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கான 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக 1, பாஜக 1 என வருவது கூட்டணி கட்சிகளின் முன்னிலையே. அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகர் முன்னிலை வகிக்கிறார். அதே போல பாஜகவுன் கூட்டணி வைத்துள்ள பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார். இதில் அதிமுக மற்றும் பாஜகவின் நேரடி வேட்பாளர்கள் யாரும் முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
-
Tamil Nadu Election Result 2024 : தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக!
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
-
Tamil Nadu Election Result 2024 : திமுகவின் நட்சத்திர வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 மக்களவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதில் திமுகவின் நட்சத்திர வேட்பாளர்களான கனிமொழி, தயாநிதிமாறன், அ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
-
Tamil Nadu Election Result 2024 : வாக்கு எண்ணிக்கையில் 3-ம் இடத்தை பிடித்த நாதக!
திருச்சி, ஈரோடு, நாகை, புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
-
Tamil Nadu Election Result 2024 : ஸ்ரீபெரம்புத்தூரில் டி.ஆர்.பாலு முன்னிலை.
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீபெரம்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார்.
-
Tamil Nadu Election Result 2024 : ராமநாதபுரம் – ஓ.பி.எஸ்.களின் வாக்கு விவரம்
ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் பெயரில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வாக்குகள் விவரம். பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 29,514 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வம் 120 வாக்குகள். மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் 234 வாக்குகள் பெற்றுள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : தமிழகத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக!
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தொடர்ந்து திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதிமுக ஒரு தொகுதியிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : கொண்டாட்டத்தில் திமுகவினர்!
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தொடர்ந்து திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
-
Tamil Nadu Election Result 2024 : கோவையில் பின்னடவை சந்தித்த அண்ணாமலை!
கோயம்புத்தூரில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை – ராதிகா பின்னடைவு
விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் முன்னிலை வகிக்கிறார். தற்போதைய எப்,பி., மாணிக்கம் தாகூர் 2000 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் உள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கன்னியாகுமரியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : 39 இடங்களில் முன்னிலை வகிக்கும் திமுக
தமிழ்நாடு – புதுச்சேரி மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போது திமுக 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 1 இடத்திலும் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : 37 இடங்களில் முன்னிலை வகிக்கும் திமுக
தமிழ்நாடு – புதுச்சேரி மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தறோது திமுக 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 1 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : தமிழகத்தில் 37 இடங்களில் முன்னிலை வகிக்கும் திமுக
தமிழ்நாடு – புதுச்சேரி மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தறோது திமுக 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 2 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : மத்திய சென்னையில் வாக்கு இயந்திரத்தில் குளறுபடி
நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் மத்திய சென்னையில் வாக்கு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
-
Tamil Nadu Election Result 2024 : திண்டுகல்லில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் சிபிஎம்!
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் திண்டுகல்லில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் தொடர்ந்து முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் முன்னிலை
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : தமிழ்நாடு – புதுச்சேரியில் முன்னிலை வகிக்கும் திமுக
தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 36 இடங்களில் திமுக கூட்டணியும், 3 இடங்களில் அதிமுக கூட்டணியும், 1 இடத்தில் பாஜக கூட்டணியும் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : விழுப்புரத்தில் விசிக முன்னிலை
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : கரூரில் ஜோதிமணி முன்னிலை
மக்களவை தொகுதிகளிக்கான வாக்கு எண்ணிக்கையில் கரூரில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : தென் சென்னையில் தமிழிசை பின்னடைவு
தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர பாண்டியன் பின்னடைவு
-
Tamil Nadu Election Result 2024 : தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக நிலவரம் என்ன?
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் திமுக கூட்டணி 35 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் பாஜக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : நீலகிரியில் அ.ராசா முன்னிலை
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் அ.ராசா முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : சவுமியா அன்புமணி முன்னிலை
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் தற்போது தர்மபுரி தொகுதியில் பாஜகவின் கூடணியில் உள்ள பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை.
-
Tamil Nadu Election Result 2024 : தேனியில் தங்க தமிழ்செல்வன் முன்னிலை
தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் முன்னிலை வகிக்கும் நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
-
Tamil Nadu Election Result 2024 : விஜய பிரபாகர் முன்னிலை
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : சிதம்பரத்தில் திருமாவளவன் முன்னிலை
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலை சிதம்பரத்தில் திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : நெல்லையில் பாஜகவை முந்தியது காங்கிரஸ்!
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதில் நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 11,004 வாக்குகள் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : தூத்துக்குடியில் 5000 வாக்குகள் முன்னிலையில் திமுக!
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி 5000 வாக்குகள் முன்னிலை
-
Tamil Nadu Election Result 2024 : திருச்சியில் மதிமுக முன்னிலை!
மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலை திருச்சியில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
Tamil Nadu Election Result 2024 : திமுக எத்தனை தொகுதிகளில் முன்னிலை!
தமிழ் நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் தற்போதைய நிலை 14 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.