Senthil Balaji Release: முடிவுக்கு வந்த சிறைவாசம்.. ஜெயிலில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று விடுதலையானார். சுமார் 471 நாட்களுக்கு பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, வெளியே வந்தார்.

Senthil Balaji Release: முடிவுக்கு வந்த சிறைவாசம்.. ஜெயிலில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி (picture credit: PTI)

Updated On: 

26 Sep 2024 20:24 PM

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் உச்ச நீதிமன்றம் வழங்கியதை அடுத்து, அவர் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். சுமார் 471 நாட்களுக்கு பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனால் புழல் சிறைக்கு வெளியே திமுக தொண்டர்கள், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.  சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  செந்தில் பாலாஜி மீது 300 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி:

பின்னர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டு காலமாக அவருக்கு ஜாமின் வழங்காமல் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

Also Read: பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை.. அதிர்ச்சி காரணம்.. மதுரையில் பயங்கரம்!

ரூ.25 லட்சம் மதிப்பில் இருவர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் வாரத்த்தில் இரண்டு தினங்கள் – திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்து அவர் வெளியே வருவதில் சில தாமதம் ஏற்பட்டது. ஜாமீன் உத்தரவாதத்தில் சில தாமதம் ஏற்பட்டது. எனவே, கடைசியாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் உத்தரவாதம் அவரது உறவினர்கள் தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோர் தலா ரூ.25 லட்சம் அளித்தனர்.

தொண்டர்கள் உற்சாக வரவேற்பு:

ஆனால், அவர்களின் வயது தொடர்பாக ஆவணங்களில் முரண்பாடு ஏற்பட்டதால் உத்தரவாதங்கள் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் உத்தரவாதங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்டது. இதனை அடுத்து, அவர் புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

471 நாட்கள் சிறைவாசம் முடிந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு கட்சி தொண்டர்கள், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பலரும் மலர் தூவியும், பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் மாதவரம் – ஆந்திரா சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Also Read: த.வெ.க மாநாடு.. விஜய்க்கு 33 கண்டீஷன் போட்ட விழுப்புரம் போலீஸ்.. என்ன நடக்குப்போகுது?

சிறையில் இருந்து வெளியே வந்ததும் பேட்டி அளித்த அவர், “வழக்கில் இருந்து மீண்டு வருவேன். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் மீது காழ்ப்புணர்ச்சியால் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் இருந்து மீண்டு வருவேன். வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு குற்றமற்றவன் என நிரூப்பிப்பேன்” என்று செந்தில் பாலாஜி கூறினார்.

அமைச்சரவையில் மாற்றம்  இருக்குமா?

செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இந்த மாதத்திலேயே அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிதித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, போக்குவரத்துத்துறை, வருவாய் நிர்வாக துறைட வனத்துறை, சட்டத்துறை, மின்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மாற்றமோ அல்லது துறையில் வேறு ஒரு அமைச்சருக்கு மாற்றத் தருவதோ நடைபெறலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது மின்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்து வரும் நிலையில், அவரு வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் செந்தில் பாலாஜிக்கே மின்துறை ஒதுக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!