Tamilnadu Election Exit Poll 2024: தமிழ்நாட்டில் சிக்ஸர் அடித்த இந்தியா கூட்டணி? அதிமுகவை பின்னுக்கு தள்ளியதா பாஜக? - Tamil News | | TV9 Tamil

Tamilnadu Election Exit Poll 2024: தமிழ்நாட்டில் சிக்ஸர் அடித்த இந்தியா கூட்டணி? அதிமுகவை பின்னுக்கு தள்ளியதா பாஜக?

Lok sabha Elections Exit Poll 2024 Results : டிவி 9 கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். தமிழ்நாட்டில் திமுக 35 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 4 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  I.N.D.I.A கூட்டணியில் உள்ள திமுக 21 இடங்களில் வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Election Exit Poll 2024: தமிழ்நாட்டில் சிக்ஸர் அடித்த இந்தியா கூட்டணி? அதிமுகவை பின்னுக்கு தள்ளியதா பாஜக?

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Updated On: 

01 Jun 2024 20:21 PM

தமிழ்நாடு தேர்தல் கருத்துக் கணிப்பு: கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 1ஆம் தேதி எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பாக தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணியில் உள்ள திமுக மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 35 இடங்களில்  வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.  39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. திமுக, அதிமுக, பாஜக தலைமையில் மூன்று அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டதால் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், TV9 Bharatvarsh, POLSTRAT மற்றும் PEOPLE’S INSIGHT ஆகியவை நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் திமுக 35 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 4 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  I.N.D.I.A கூட்டணியில் உள்ள திமுக 21 இடங்களில் வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக தலா ஒரு இடங்களையும், இடதுசாரிகள் நான்கு இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 22.43 சதவீத வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. I.N.D.I.A கூட்டணி 42.03 சதவீத வாக்குகள் பெறும் எனவும், அதிமுக 22.22 சதவீத வாக்குகள் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற கட்சிகள் 23.32 சதவீத வாக்குகள் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், தேனியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. தேனியில் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 53.15 சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணி 30.56 சதவீத வாக்குகளும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சரியாக இருக்குமா? கடந்த கால வரலாறு சொல்வது இதுதான்!

 

 

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?