5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Onam 2024: களையிழந்த ஓணம் பண்டிகை.. தமிழ்நாடு பூ வியாபாரிகளுக்கு நஷ்டம்.. அச்சச்சோ!

வயநாடு நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக கேரள அரசு அறிவித்திருந்தது. இதனால் ஓணம் கொண்டாட்டம் களையிழந்ததால் தமிழ்நாடு பூ வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோவை, சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பூ வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Onam 2024: களையிழந்த ஓணம் பண்டிகை.. தமிழ்நாடு பூ வியாபாரிகளுக்கு நஷ்டம்.. அச்சச்சோ!
ஓணம் 2024
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 12 Sep 2024 19:02 PM

ஓணம் பண்டிகை: கேரளாவில் ஓணம் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த ஓணம் பண்டிகை கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். அதாவது, மலையாளத்தில் சிம்ம மாதமான இந்த மாதத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போடப்படும் அத்திப்பூ என்ற பூக்கோலம் ஆகும். ஓணம் கொண்டாடப்படும் 10 நாட்களிலும் 10 வகைகயான அத்திப்பூ கோலம் போட்டுவார்கள். இதற்காக அண்டை மாநிலமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூக்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின்போது கிலோ கணக்கில் பூக்கள் அனுப்பப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் அதிகளவில் லாபம் ஈட்டி வந்தனர்.

ஓணம் பண்டிகையின்போது மலர்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் நல்ல லாபமும் கிடைக்கும்.  ஆனால், இந்த ஆண்டு தமிழ்நாடு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிற்கு அனுப்பப்பட்ட பூக்களின் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் சேலம், மதுரை, திண்டுக்கல்லில் உள்ள நிலக்கோட்டை மற்றும் ஓசூரில் கேரளாவிற்கு பூக்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்த பூக்கள் கேரள எல்லையான தோவாளை சந்தைக்கு வந்து சேரும்.

Also Read: 2 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்.. 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை..

பாதிக்கப்பட்ட பூ வியாபாரிகள்:

இதன் மூலம் தமிழக பூ வியாபாரிகள் ஆண்டுதோறுல் நல்ல வருமானத்தை பெற்று வந்தனர். ஆனால், இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஓணம் சமயத்தில் கேரளாவுக்கு 110 டன் பூக்கள் அனுப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 15 டன் பூக்கள் மட்டுமே அனுப்பப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ சாமந்தி பூ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 30 கிலோ பூ பைக்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதி மலர் சாகுபடிக்கு பிரபலமானது. இந்த பகுதிக்கு உட்பட்ட மோளபாளையம், வடிவேலம்பாளையம், காளிமங்கலம், நரசிபுரம், வெரலியூர் உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு மலர் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் கேரளா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக ஓணம் பண்டிகையின்போது கேரளாவிற்கு 30 டன் வரை ஆண்டுதோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு பாதி டன் கூட அனுப்ப முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியிருக்கின்றனர்.  இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் யுவிஎஸ் செல்வகுமார் பேசுகையில், “ஓணம் பண்டிகை 12 நாள் சீசன் என்பதால் கேரளாவுக்கு சுமார் 20 முதல் 25 டன் பூக்கள் அனுப்பப்படும். ஆனால் இந்த ஆண்டு ஓணத்திற்கு இரண்டு முதல் மூன்று டன் பூக்கள் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது” என்றார்.

காரணம் என்ன?

கடந்த ஜூலை 30ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த 3ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மண்ணோடு, மண்ணாக புதைந்து போயினர். கிட்டதட்ட 3 கிராமங்கள் மண்ணுக்குள் சென்றதை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்து தான் போனது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதேசமயம் கனமழையால்  பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள், உடமைகள், வீடுகள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தங்கும் இடம் இல்லாமல் தவித்தனர். பேரழிவால் ஏற்பட்டுள்ள கடுமையான சோகத்தால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக கேரள அரசு அறிவித்திருந்தது.

Also Read: ஃபிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து.. 2 பேர் உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

இதனால் கல்வி நிறுவனக்ஙள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றில் ஓணம் பண்டிகை கொண்டாடாமல் இருக்கின்றனர். இந்த காரணத்தால் தான் ஓணம் பண்டிகைக்கு முக்கியமாக இருக்கும் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பூ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பூ வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News