5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

20% தீபாவளி போனஸ்.. சர்க்கரை ஆலை ஊழியர்கள் குஷி.. யார் யாருக்கு எவ்வளவு?

தீபாவளி போனஸ் : கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்துள்ளது.  சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு கருணைத் தொகை, போனஸ் என 20 சதவீதம் அறிவித்துள்ளது தமிழக அரசு.

20% தீபாவளி போனஸ்.. சர்க்கரை ஆலை ஊழியர்கள் குஷி.. யார் யாருக்கு எவ்வளவு?
தமிழக அரசு
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Oct 2024 09:14 AM

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்துள்ளது.  சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு கருணைத் தொகை, போனஸ் என 20 சதவீதம் அறிவித்துள்ளது தமிழக அரசு. தீபாவளி பண்டிகைக்கு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்துள்ளது.

சர்க்கரை ஆலை ஊழியர்கள் குஷி

2023-24ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போனஸ் ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணை தொகையாக 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.

Also Read : தீபாவளி கூட்ட நெரிசல்.. சென்னையில் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து.. இத்தனை நாட்களா?

அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள்.

20% தீபாவளி போனஸ் அறிவித்த தமிழக அரசு

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5775 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.411.90 இலட்சங்கள் செலவினம் ஏற்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : சென்னை வாசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. வேளச்சேரி – கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தொடக்கம்.. எப்போது?

முன்னதாக, டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை போனஸ் பெறுவார்கள்.

மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அகவிலைப்படி 50 சதவீத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதேபோல, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.

Latest News