Nellai Crime News: ”அதிக லக்கேஜ் ஏன் ஏத்துற?” பயணி கன்னத்தில் அறைந்த நடத்துனர்.. அதிர்ச்சி வீடியோ!

நெல்லையில் பயணி ஒருவரை நடத்துனர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக லக்கேஜ்களுடன் பேருந்து ஏற முயன்றபோது, அவரை நடத்துனர் கன்னத்தில் அறைந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணியை தாக்கிய சம்பந்தப்பட்ட நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Nellai Crime News:  ”அதிக லக்கேஜ் ஏன் ஏத்துற?” பயணி கன்னத்தில் அறைந்த நடத்துனர்.. அதிர்ச்சி வீடியோ!

வீடியோ காட்சி

Updated On: 

05 Nov 2024 11:00 AM

நெல்லையில் பயணி ஒருவரை நடத்துனர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக லக்கேஜ்களுடன் பேருந்து ஏற முயன்றபோது, அவரை நடத்துனர் கன்னத்தில் அறைந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணியை தாக்கிய சம்பந்தப்பட்ட நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து திருநெல்வேலி டவன் நோக்கி நேற்று காலை 8.30 மணிக்கு அரசு பேருந்து புறப்பட்டது. இதில் மூலைக்கரைப்பட்டியில் இருந்து ஒரு முதியவர் ஏற முயன்றார்.

பயணி கன்னத்தில் அறைந்த நடத்துனர்

அப்போது, அவர் சில லக்கேஜ்களை வைத்திருந்தார். இதனால் பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துனர் இவ்வளவு லக்கேஜ்களை ஏற்றக் கூடாது என்று கூறியிருக்கிறார். அதற்கு வேண்டுமானால் லக்கேஜ் சார்ஜ் செலுத்துகிறேன் என்று முதியவர் கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துனர், முதியவரை இரண்டு முறை நடுரோட்டில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார். முதியவரை கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த முதியவரை தகாத வார்த்தைகளால் நடத்துனர் திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதும், பயணியிடம் தவறாக நடந்து கொண்ட நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இவர் 52 வயதான சேதுராமலிங்கம் என்பது தெரியவந்துள்ளது.  அதிக லக்கேஜ்களுடன் பேருந்தில் ஏற முயன்ற பயணியை, நடத்துனர் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : தமிழக அரசு வேலைவாய்ப்பில் இந்தி மொழி சேர்த்த அதிகாரி சஸ்பெண்ட்.. அமைச்சர் விளக்கம்!

தொடரும் புகார்கள்:

தமிழகத்தில் பேருந்து வசதி என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பேருந்துகள் சேவை உள்ளது.  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு ஒருநாளைக்கு ரூ.20,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பயன் அடைந்து வருகிறார்.

குறிப்பாக, ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, முதியவர்களுக்கு இலவச பயணம், பெண்களுக்கு இலவச பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், பேருந்தை அரசு சரியாக பராமரிக்கவில்லை என்றும் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன என்றும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read : சென்னையின் முக்கிய சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா?

மேலும், பேருந்தில் பயணிகளை நடத்துனர் தகாத முறையில் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இலவசமாக பயணிகளுக்கு பெண்களுக்கு சரியான மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.  இப்படியான சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக லக்கேஜ்களுடன் பேருந்தில் ஏற முயன்ற பயணியை, நடத்துனர் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!