சென்னையில் ஒரே டிக்கெட் முறை.. எப்போது அறிமுகம்? வந்தது முக்கிய அறிவிப்பு!
சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் மக்கள் பயணித்து வருகின்றனர். ஆனால், இந்த மூன்று சேவைகளுக்கும் மக்கள் தனிதனியாக டிக்கெட் எடுத்து பயணித்து வருகின்றனர். மக்கள் தனித்தனியாக பயணிச்சீட்டை பயன்படுத்தும் நிலையில், இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும்முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த சேவை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னையில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை: சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் மக்கள் பயணித்து வருகின்றனர். ஆனால், இந்த மூன்று சேவைகளுக்கும் மக்கள் தனிதனியாக டிக்கெட் எடுத்து பயணித்து வருகின்றனர். மக்கள் தனித்தனியாக பயணிச்சீட்டை பயன்படுத்தும் நிலையில், இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும்முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான செயலியை உருவாக்க Moving Tech Innovations Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கி உள்ளது. முதற்கட்டமாக இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணம் செய்யும் வகையில் நடைமுறைபடுத்த உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Also Read: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்..!
எப்படி பயன்படுத்துவது?
சென்னையில் ஒரே டிக்கெட் முறையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகளில் பயணிக்க ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்கேன் செய்து பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். பேருந்துகளில் நடத்துனரிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே, இந்த ஒரு கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். எனவே, இந்த கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக அவர்கள் கவுண்டர்களில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டவுடன் நீங்கள் உங்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். எப்படி, மின்சார ரயிலுக்கும், மெட்ரோ ரயில்களுக்கும் டிக்கெட் புக் செய்கிறோமோ அதுபோலவே இந்த செயலியும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் புக் செய்வது போன்று தான். புறப்படும் இடம் மற்றும் இறங்கும் இடத்தை தேர்வு செய்து எந்தெந்த போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை தேர்வு செய்து அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதனால், மக்கள் ஒவ்வொரு போக்குவரத்து சேவையை பயன்படுத்த தனிதனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?