அரசு பேருந்துகளில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு!
பயணிகள் வசதிக்காக அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை 90 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அரசு பேருந்துகளில் பயணிகள் 60 நாட்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில், அதனை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை 90 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போக்குவரத்து சேவை என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பயணிகளின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணம் என்பதால் மக்கள் அதிகளவில் அரசு பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
அரசு பேருந்து முன்பதிவில் மாற்றம்
இதனால், சிறப்பு பேருந்துகளும் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பண்டிகை காலங்களில் சில மாதங்களுக்கு முன்பே பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.
தற்போது வார நாட்களிலும் பயணிகள் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக முன்பதிவு செய்து செல்லும் பயணிகளுக்கு மாதம் தோறும் குலுக்கல் முறையில் பரிசுத் தொகை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பயணிகள் வசதிக்காக முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை 90 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அரசு பேருந்துகளில் பயணிகள் 60 நாட்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில், அதனை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று (18.11.2024) மதியம் 12 மணி முதல் 90 நாட்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #OnlineBooking | #OTRS | #TNSTC | #SETC… pic.twitter.com/se1X1eWiF8— ArasuBus (@arasubus) November 18, 2024
Also Read : 2026ல் விஜய் களமிறங்கும் சட்டமன்ற தொகுதி.. வெளியான அறிவிப்பால் மகிழ்ச்சி!
டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பயணிகளிடம் இருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத் திட்டமிடலுக்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதை 90 நாட்கள் என உயர்த்தி 18 நவம்பர், 2024 மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.
பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. மறுஆய்வு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
இந்த புதிய மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வரும் நாட்களில் 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். TNSTC ஆப் அல்லது TNSTC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் தற்போது முதலே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.