5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Loksabha Results: பிரதமராகிறீர்களா? கருணாநிதி ஸ்டைலில் பதில் அளித்த ஸ்டாலின்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தமிழக முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டாலின் பிரதமராவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “கலைஞர் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன். என் உயரம் என்ன என்று எனக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.

Tamilnadu Loksabha Results: பிரதமராகிறீர்களா? கருணாநிதி ஸ்டைலில் பதில் அளித்த ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jun 2024 21:14 PM

”பாஜகவின் கனவு தமிழ்நாட்டில் எடுபடவில்லை” தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தமிழக முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்தியாவை காப்போம் என்ற உறுதிமொழியை வழங்கி I.N.D.I.A  கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீதமிருந்த ஒரு தொகுதியையும் சேர்ந்து நாற்பதுக்கு நாற்பதை மக்கள் கொடுத்திருக்கின்றனர்.

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரா?

இந்திய அளவில் INDIA கூட்டணியை அனைவரும் சேர்ந்து அமைத்தோம். கருத்து கணிப்பு என்ற பெயரில் பாஜக உளவியல் பிரச்சினையை கொடுத்தது. ஆனால் அது தவிடு பொடியாகியுள்ளது. 400 இடங்கள் என்று கூறிய பாஜகவுக்கு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. பாஜகவின் பண பலம் எடுபடவில்லை. இந்த வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்கி விடுவோம்.

பாஜகவின் கனவு தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தாமரை மலரும் மலரும் என்று எப்படி மலராமல் போய்விட்டதோ! மோடியின் எதிர்ப்பலை இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கிறது. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” என்றார். பின்னர், ஸ்டாலின் பிரதமராவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “கலைஞர் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன். என் உயரம் என்ன என்று எனக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.

40 இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி நிலவியது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் 3வது அணியும், நாம் தமிழர் தனித்து களம் கண்டது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணியில் ஐஜெகே, புதிய நீதிக் கட்சி, தமுமுக, பாமக, தாமாகா, அமமுக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், திமுக கூட்டணியில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.

Latest News