ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.1000.. அரசு தந்த சூப்பர் அறிவிப்பு!
Kalaignar Magalir Urimai Thogai : வரும் ஜனவரி மாத்திற்கு பிறகு ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது 1.16 கோடி பெண்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்பட்டு வரும் சூழலில், தற்போது ரேசன் கார்டு வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி மாத்திற்கு பிறகு ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது வரை 1.16 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. சில நிபந்தனைகளுடன் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் உரிமைத் தொகை தகுதியுள்ளவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.1000
இந்த சூழலில், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 ஜனவரி முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது.
அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை துவங்கப்பட்டது. பெண்கள் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக அவர்கள் யாரையும் சார்ந்திருக்க கூடாது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.
இந்தி திட்டத்தில் பயன் அடைவர்களுக்கு பொருளாதா அடிப்படையின் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1.16 மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
Also Read : கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர்.. உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான வீடியோ
இந்த திட்டத்தில் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மேலும், ஒரு குடும்பத்தில் பல பெண்கள் இருந்தாலும், ரேஷன் கார்டில் குறிப்பிட்டுள்ள குடும்பத் தலைவிக்கு மட்டுமே உரிமைத் தொகை வரும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், தொழில் செய்வோர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநில, அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தகுதியற்றவர்கள் என்று அறிவிப்பில் அறிவிக்கப்பட்டது.
Also Read : அடுத்த 4 நாட்களுக்கு கனமழை அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை!
இந்த தகுதியின் அடிப்படையில் தற்போது வரை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், வரும் ஜனவரி மாத்திற்கு பிறகு ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால், யாரு யாருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எந்த தகவலும் அவர் சொல்லவில்லை. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.