ரேஷன் கார்டு உள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகையா? அமைச்சர் விளக்கம்!

Kalaignar Magalir Urimai Thogai: ரேஷன் கார்டு உள்ள அனைத்து பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியது பேசும்பொருளாக மாறிய நிலையில், தற்போது அவரை அதற்கு விளக்கம் அளித்துள்ளார். ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

ரேஷன் கார்டு உள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகையா? அமைச்சர் விளக்கம்!

மகளிர் உரிமைத் தொகை

Updated On: 

13 Nov 2024 22:03 PM

ரேஷன் கார்டு உள்ள அனைத்து பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியது பேசும்பொருளாக மாறிய நிலையில், தற்போது அவரை அதற்கு விளக்கம் அளித்துள்ளார். ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஊரக வளர்ச்சிப்பணியை வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு உரிமைத் தொகையா?

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், “வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரையில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்” என்றார். மகளிர் உரிமைத் தொகை அமைச்சர் கூறியது பேசும் பொருளாக மாறிய நிலையில், அவரே விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே #திராவிட_மாடல் அரசின் இலக்காகும்.

மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்” என்று பதிவிட்டிருந்தார்.

Also Read : ”யாருக்கும் பாதுகாப்பு இல்லை” மருத்துவருக்கு கத்திக்குத்து.. கொதித்தெழுந்த விஜய்!

வருவாய்த்துறை அமைச்சர் விளக்கம்

2021 தேர்தல் வாக்குறுதியாக திமுக தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படியே, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  பெண்களின்  உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக அவர்கள் யாரையும் சார்ந்திருக்க கூடாது என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் தகுதியுடையவர்களுக்கு ஓராண்டாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் ரூ.1000 என 12 மாதங்கள் ரூ.12,000 வழங்கப்படுகிறது.  தற்போது வரை 1.16 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை

இந்த உதவித் தொகைகளை பெற சில நிபந்தனைகளையும் தமிழக அரசு அறிவித்தது.  ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஓராண்டு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதியுடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

மேலும், ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், தொழில் செய்வோர்கள், மாநில, அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியற்றவர்கள் என முன்கூட்டியே தமிழக அரசு தெரிவித்திருந்தது.

Also Read : கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர்.. உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான வீடியோ

இதன் அடிப்படையில் தான் தகுதியுள்ள பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில், இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை கூறியிருந்ததார். அதாவது, ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படும் என்றும் விளக்கியுள்ளார்.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!