EB Update : மின் இணைப்பு கட்டணம் உயர்வு.. வீடு முதல் தொழிற்சாலை வரை விலை விவரம்

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வீடுகள், விசைத்தறி, தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு ஒருமுறை மின் இணைப்பு கட்டணம் ரூ.1,020 ஆக இருந்த நிலையில், ரூ.1,070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்முனை இணைப்புக்கு ரூ.1,535 ஆக இருந்த கட்டணம் ரூ.1,610 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

EB Update : மின் இணைப்பு கட்டணம் உயர்வு.. வீடு முதல் தொழிற்சாலை வரை விலை விவரம்

மின் இணைப்பு கட்டணம் உயர்வு

Published: 

19 Jul 2024 09:11 AM

மின்சார சேவை கட்டணம் உயர்வு: தமிழ்நாட்டில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டது. அதாவது, வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கோயில்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த சூழலில், மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வீடுகள், விசைத்தறி, தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு ஒருமுறை மின் இணைப்பு கட்டணம் ரூ.1,020 ஆக இருந்த நிலையில், ரூ.1,070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்முனை இணைப்புக்கு ரூ.1,535 ஆக இருந்த கட்டணம் ரூ.1,610 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், மீட்டர், மின் இணைப்பு பெட்டி பழுது, இணைப்பை வேறு இடத்திற்கு மாற்றுமதல் ஆகியவற்றுக்கு ஒருமுனை இணைப்புக்கு ரூ.1,020 ஆக இருந்த நிலையில், ரூ.1,070 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்முனை இணைப்புக்கு 1,535 ரூபாயில் இருந்து ரூ.1,610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Also Read: தொடர்ந்து கொட்டும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்?

மீட்டருக்கான டெபாசிட் தொகை ஒருமுனை இணைப்புக்கு 765 ரூபாயில் இருந்து ரூ.800 ஆகவும், மும்முனை இணைப்புக்கு அதன் திறன் வாரியாக ரூ.2,045, ரூ.7,050, ரூ.8,450 என இருந்த தொகை ரூ.2,145, ரூ.7,390, ரூ.8,890 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் ஒருமுனை இணைப்புக்கு 5,315 ரூபாயில் இருந்து ரூ.5,570 ஆகவும், மும்முனை மீட்டருக்கு 7,255, 8,430 ரூபாயில் இருந்து ரூ.7,605, ரூ.8,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மறு இணைப்புக்கு ரூ.130, ரூ.320, ரூ.535 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்திற்கான கட்டணம் ரூ.615 ஆக இருந்த நிலையில், ரூ.645 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மின் கட்டணம் விவரம்:

முன்னதாக, மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யுனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு யூனிட்டிற்கு ரூ.4.60 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு யூனிட்டிற்கு 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.80 ஆக உள்ளது.401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே ஒரு யூனிட்டிற்கு ரூ.6.15 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு யூனிட்டிற்கு 30 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.6.45 ஆக உள்ளது.

501 முதல் 600 யூனிட் வரையில் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த  நிலையில், தற்போது 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.8.55 ஆக உள்ளது. 601 முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே ஒரு யூனிட் ரூ.10.20 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.10.70 ஆக உள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே ஒரு யூனிட்டுக்கு ரூ.11.25 காசுகள் வசூலிக்கப்பட்ட நிலையில், 55 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.11.80 ஆக உள்ளது.

Also Read: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்டில் இருக்கும் ஏரியாக்கள் இதோ!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!