500 ஆண்டுகள் பழமையான ஆழ்வார் சிலை.. இந்தியாவிடம் திருப்பி தர பிரிட்டன் ஒப்புதல்!
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் உலகின் மிகவும் பிரபலமான கலை மற்றும் தொல்பொருள் கலைப்பொருட்கள் சிலவற்றை வைத்திருக்கிறது. இது 1967ஆம் ஆண்டு திருமங்கை ஆழ்வார் சிலை நல்ல எண்ணத்தில் வாங்கியதாக கூறுகிறது. எனவே, திருடப்பட்ட பல்வேறு இந்திய சிலைகள் பிரட்டனில் இருந்து இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவரப்பட்ட நிகழ்வுகள் பலமுறை நடந்துள்ளன. சமீபத்தில் கூட, கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆந்திராவில் இருந்து சுண்ணாம்பு கற்கள்ல் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் மற்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்தில் உருவான கிருஷ்ணரின் வெண்கலச் சிலை ஆகியவற்றை பிரிட்டனுக்கான இந்தியா தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பழமையான ஆழ்வார் சிலை: தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையை திருப்பித் தர புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 மார்ச் 11 அன்று ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருந்து 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையை திருப்பித் தருவதற்கான இந்திய கோரிக்கையை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கவுன்சில் ஏற்றுக்கொண்டது. இந்த முடிவு இப்போது அறக்கட்டளை ஆணையத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
Also Read: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!
இந்தியாவிடம் திருப்பி தர பிரட்டன் ஒப்புதல்:
மேலும், “60 செ.மீ உயரமுள்ள திருமங்கை ஆழ்வாரின், மருத்துவர் ஜே.ஆர். பெல்மாண்ட் (1886-1981) என்ற சிலை சேகரிப்பாளரின் சேகரிப்பில் இருந்து 1967 ஆம் ஆண்டு சோதேபியி ஏல மையத்தில் இருந்து ஆக்ஸ்ஃபோர்ட் அருங்காட்சியகத்தால் 1967ஆம் ஆண்டில் வாங்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு ஆராய்ச்சியாளர் மூலம் பழங்கால சிலையின் தோற்றம் குறித்து அறிந்தோம். அதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் வெண்கல சிலையை திரும்ப பெற இந்திய அரசு முறையான கோரிக்கையை விடுத்தது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் உலகின் மிகவும் பிரபலமான கலை மற்றும் தொல்பொருள் கலைப்பொருட்கள் சிலவற்றை வைத்திருக்கிறது. இது 1967ஆம் ஆண்டு திருமங்கை ஆழ்வார் சிலை நல்ல எண்ணத்தில் வாங்கியதாக கூறுகிறது. எனவே, திருடப்பட்ட பல்வேறு இந்திய சிலைகள் பிரட்டனில் இருந்து இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவரப்பட்ட நிகழ்வுகள் பலமுறை நடந்துள்ளன. சமீபத்தில் கூட, கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆந்திராவில் இருந்து சுண்ணாம்பு கற்கள்ல் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் மற்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்தில் உருவான கிருஷ்ணரின் வெண்கலச் சிலை ஆகியவற்றை பிரிட்டனுக்கான இந்தியா தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Also Read: லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூ.500.. 28 வருடங்களுக்கு பிறகு புகார்தாரரிடம் ஒப்படைப்பு.. கோவையில் விநோதம்!