5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: சென்னை முதல் கோவை வரை.. இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

தமிழ்நாடு மின்தடை: பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 18) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Powercut: சென்னை முதல் கோவை வரை.. இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 18 Oct 2024 07:05 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 18) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன.

மின்தடை:

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 18ஆம் தேதியான இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: பாப் பாடகர் லியாம் பெய்ன் ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மரணம்… ரசிகர்கள் வேதனை

எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை?

சென்னை

ராயபுரம் கல்மண்டபம், எசத் கல்மண்டபம் சாலை, மேற்கு கல்மண்டபமா சாலை, சூரியநாராயண செட்டி தெரு, காசிமா நகர், காசி தோட்டம், ஜிஎம் பேட்டை, அர்த்தன் சாலை, பிவி கோயில் தெரு, என்ஆர்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

திருவள்ளூர்

பொன்னேரி அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் சாலை, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர் விருந்தாவன் நகர், எம்.கே கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாத் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

திருச்சி

திருச்சி புதனம்பட்டி தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், ஜடவுடவள்ளூர், மென்டலூர். எடமலைப்பட்டிபுதூர் அன்பு என்ஜிஆர், இ.புதூர், கிருஷ்ணபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா என்ஜிஆர், குட்டி மலை, அரசு கிளை, ராஜீவ் காந்தி என்ஜிஆர், கேஆர்எஸ் என்ஜிஆர், ஆர்எம்எஸ் கிளை, அருணாச்சலம் க்ளை ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

ஈரோடு

ஈரோடு எழுமாத்தூர், மாங்கரடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், பெருந்துறை சிப்காட் பாளையம், காப்பாறைச்செல்வன் ரோடு, சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கோவை

கோவை செல்லப்பம் பாளையம் மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாரணபுரம், சோமையம்பாளையம் சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி

வடசேரி வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி, புதுக்கோட்டை நெடுவாசல் சூழ்ந்த கரம்பக்குடி கரம்பக்குடி ரெகுநாதபுரம் ரெகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகள் மின் தடை செய்யப்படுகிறது.

திருப்பூர்

கரடிவாவி அப்பநாயக்கன்பட்டி, எம்சிபி, மில், கிமீ புரம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அய்யம்பள்ளயம், பூலாங்கிணர் பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடக்கம்பாளையம், பொன்னாலமணன்சோலை, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

சேலம்

அ.மேட்டூர் பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம், கிழக்கு ஏற்காடு, நல்ல சாலை, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி, மேற்கு எம்.பி.கோவில், புத்தூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை

மங்கலம், மத்தளம்பாடி, ஆர்ப்பாக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பழநாடல், ஆதமங்கலம் ஆதமங்கலம், சிறுவலூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

 

 

Latest News