Tamilnadu Powercut : சென்னை முதல் கோவை வரை.. முக்கிய மாவட்டங்களில் இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ.. - Tamil News | tamilnadu powercut 19th september 2024 thursday chennai karuru coimbatore thiruppur and other parts to face power outage | TV9 Tamil

Tamilnadu Powercut : சென்னை முதல் கோவை வரை.. முக்கிய மாவட்டங்களில் இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ..

Updated On: 

19 Sep 2024 07:50 AM

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Powercut : சென்னை முதல் கோவை வரை.. முக்கிய மாவட்டங்களில் இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ..

கோப்பு புகைப்படம் (pic courtesy: unsplash)

Follow Us On

தமிழ்நாட்டில் இன்று முக்கிய மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, கோவை. திருப்பூர், கரூர், சென்னையில் ரெட்ஹில்ஸ், அத்திப்பட்டு புது நகர் மற்றும் டிஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 19 ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  முன்னாள் அமைச்சர் சுந்தரம் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

எங்கே மின்தடை?

சென்னை:

அத்திப்பட்டு புதுநகர்:

அத்திப்பட்டு புது நகர் பகுதியில் சேப்பாக்கம், மவுத்தமேடு, கே.ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி இண்டஸ்ட்ரியல், தமிழ் குரஞ்சியூர், நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரியான்மேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

டி.ஜி. நகர்:

டிஜி நகர் பகுதியில் சரஸ்வதி நகர் பகுதி, கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி, 5,6,7 தெரு, எஸ்கலோம்ஸ் குடியிருப்புகள், டிஆர்ஏ குடியிருப்புகள், சல்மா குடியிருப்புகள், பாலாஜி நகர் 23 முதல் 37வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க: பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!

ரெட்ஹில்ஸ்:

ரெட்ஹில்ஸ் பகுதியில் எம்ஜிஆர் நகர், முத்து மாரியம்மன் தெரு, ஆசை தம்பி தெரு, மூவேந்தர் தெரு, சர்ச் தெரு, காமராஜர் நகர், நேதாஜி நகர். சரஸ்வதி நகர், கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி, 5,6,7 தெரு, எஸ்கலோம்ஸ் குடியிருப்புகள், டிஆர்ஏ குடியிருப்புகள், சல்மா குடியிருப்புகள், பாலாஜி நகர் 23 முதல் 37வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

விருதுநகர்:

பாறைப்பட்டி – பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணபுரம், சிவகாசி நகர் – கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கன்னியாக்குமரி:

வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம், புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புத்தத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை ஆகிய பகுதிகள்.

கோயம்புத்தூர்:

சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர் ஆகிய பகுதிகள்.

திருப்பூர்:

உடுமலையில் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி, எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஒது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி ஆகிய பகுதிகள்.

கடலூர்:

சிற்றரசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டாம்பாக்கம், வெள்ளக்கரை, கொடுக்கன்பாளையம், மாவடியாபாளையம், ஒத்தியடிக்குப்பம், கீழ்கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், பகண்டை, கொங்கராயனூர், நல்லத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், செல்லஞ்சேரி துக்கணாம்பாக்கம், நத்தப்பட்டு, வரகல்பட்டு, எஸ் புதூர், குட்டியங்குப்பம், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகள்.

கிருஷ்ணகிரி:

பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி,முதுகுருக்கி, நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி. எஸ். திம்மசந்திரம், டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், 2 கொத்தூர் ஆகிய பகுதிகள்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version