Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் (02.09.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பராமாரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: காதல் ஜோடியை கடத்திய பெண் வீட்டார்.. தென்காசியில் நடந்த பரபர சம்பவம்!
எந்தெந்த பகுதிகள்?
சென்னை:
மேற்கு தாம்பரம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. அங்கு குளக்கரை, திருவங்கடம் நகர், மேலந்தை தெரு, தெற்கு தெரு, பூர்ணதிலகம் தெரு, கல்யாண் நகர், வைகை நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பகுதிகள் தேவனுர்புதூர், விற்பனைம்பாளையம், கராடூர், ரவனபுரம், ஆற்றியூர், பாண்டியங்கராடு, எரிசணம்பட்டி, வல்லகுண்டபுரன், எஸ்.நல்லூர், ஆர்தனரிபாளையம், புங்கமுதூர், வலயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேட்டூர், அருர்பட்டி, பச்சபதி, பூசாரியூர், டவுன் ஜலகண்டாபுரம், மலாயம்பாளைம், சிலவாடாய், பனிகானூர், சோவரியூர், ஜருப்பலி, வீரபாண்டி டவுன், பப்பராபதி, வாணியம்பாடி, கடதூர, பலம்பதி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
Also Read: வாகன ஓட்டிகளே..சென்னையின் முக்கிய இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம்!
கோவை:
கோவை மாவட்டத்தில் சூலூரின் ஒரு பகுதி, தொழில்துறை பகுதி, நீலம்புரின் ஒரு பகுதி, லட்சுமி நகர், அண்ணா நகர், குளத்தூர், முத்துக்கவுடன்புதூர் ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.