Tamilnadu Powercut: சென்னை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..
தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 7) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னை, கோவை, சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.
மின்தடை:
தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 7ஆம் தேதியான இன்று தமிழகத்தில் சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
Also Read: கதி கலங்கிய மெரினா.. தண்ணீர் இன்றி தவித்த மக்கள்.. திணறிய காவல்துறை!
எந்தெந்த மாவட்டங்கள்?
சென்னை:
அரும்பாக்கம்
ஏஆர் பிளாக், கமலா நேரு நகர் 1வது & 2வது தெரு, அசோக் நகர், சுப்பராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணா நகர், கல்கி நகர், 100 அடி சாலை, மேத்தா நகர், என்எம் சாலை, எம்எச் காலனி, ரயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, டிஜி வைஷ்ணவ் கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்டரேட் காலனி, அய்யாவூ காலனி, காயத்ரி தேவி, ரசாக் கார்டன், ஜே.டி. துரைராஜ் நகர், ஆசாத் நகர், விஜிஏ நகர், எஸ்பிஐ ஆபீசர்ஸ் காலனி, ஆசாத் நகர், விஜிஏ நகர், எஸ்பிஐ ஆபீசர்ஸ் காலனி, சக்தி நகர் 1வது-5வது தெரு, திருவள்ளுவபுரம் 1வது & 2வது தெரு, கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு உயர் சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகண்டன் தெரு, கான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் குடமலை, பேலூர், ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம், கூலமாடு, மண்மலை, கொண்டயம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பானாவரம், கரிகால், விஜி புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால், சோளிகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், அரிசனம்பட்டி, நல்லூர், புங்கமுத்தூர், வளையபாளையம், தேவனூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: சின்னத்திரை டூ வெள்ளித்திரை… பிக்பாஸ் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ!
மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும், முன்கூட்டியே பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால் விரைந்து மின்சாரம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.