Tamilnadu Rain Alert: 23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்த திசையில் நகரும்? எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?
நவம்பர் இரண்டாவது வாரத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால் நவம்பர் மாதம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இன்னும் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையவில்லை. அதே போல் இம்முறை வடகிழக்கு பருவ மழை தற்போதைய நிலவரப்படி இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை கடந்த மாதம் தொடங்கியது. வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எதிர்ப்பார்த்த அளவு மழை இல்லை. நவம்பர் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் அது தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து சென்றதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாமல் போனது. அதேப்போல் கடந்த வாரம் மீண்டும் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாமதமாக உருவானலும், எதிர்ப்பார்த்த அளவு மழை கொடுக்கவில்லை.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:
நவம்பர் இரண்டாவது வாரத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால் நவம்பர் மாதம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இன்னும் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையவில்லை. அதே போல் இம்முறை வடகிழக்கு பருவ மழை தற்போதைய நிலவரப்படி இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: பக்தர்களுக்கு திடீர் தடை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு!
இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்றும் இதன் காரணமாக, 23-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?
தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ.1 கோடி கேட்டு தாய், மகள் கடத்தல்.. சினிமா பாணியில் பிடிக்கப்பட்ட 7 பேர்!
அதேபோல், வரும் 25 ஆம் தேதி, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிகப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னைய பொறுத்தவரை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26′ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.