Tamilnadu Rainfall: நெல்லையில் பதிவான 17 செ.மீ மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Rainfall: நெல்லையில் பதிவான 17 செ.மீ மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

கோப்பு புகைப்படம்

Published: 

20 Nov 2024 13:35 PM

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை மெல்ல மெல்ல தீவிரம் அடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக, 23-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லையில் கொட்டித்தீர்த்த மழை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் பனி பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவிக்கையில், “ நாகை, திருவாரூர், புதுக்கோட்டை கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட சில இடங்களில் மிக கனமழையுடன் கூடிய கனமழை பெய்யும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நவம்பர் 26 முதல் பரவலாக மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இன்று, திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், மயிலாடுதுறை, தஞ்சாவூர். புதுக்கோட்டை, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வரும் 26 ஆம் தேதி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)

நாலுமுக்கு (திருநெல்வேலி) 17, ஊத்து (திருநெல்வேலி) 15, கோடியக்கரை (மயிலாடுதுறை) தலா 15, காக்காச்சி (திருநெல்வேலி) 14, திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 13, திருக்குவளை (நாகப்பட்டினம்) 11, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), ராமநாதபுரம் (ராமநாதபுரம்) தலா 10, தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 9, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), பரமக்குடி (ராமநாதபுரம்) தலா 8, வாலிநோக்கம் (ராமநாதபுரம்) 7, தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்). தூத்துக்குடி ரயில் நிலையம் ARG (தூத்துக்குடி), நாங்குனேரி (திருநெல்வேலி), களக்காடு (திருநெல்வேலி), தூத்துக்குடி (தூத்துக்குடி) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!
நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
குழந்தையின் வெற்றிக்கு தாய் செய்ய வேண்டிய விஷயங்கள்!
நடிகை ஷாலினி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!