5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Orange Alert: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 7 இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

இன்று தமிழகத்தில் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Orange Alert: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 7 இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Nov 2024 13:55 PM

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேக வெடிப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை இந்த மழை பதிவாகியுள்ளது. கடந்த மாதம் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது. அது முதல் தற்போது வரை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. ஆனால் வட தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. இன்னும் சில நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவிக்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சீர்காழியில் 40 செ.மீ மழையும், 2023 ஆம் ஆண்டு காயல்பட்டினத்தில் 90 செ.மீ மழையும், 2024 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் 40 செ.மீ மழையும் அதிகபட்சமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என தெரிவித்துள்ளார்.


மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக, வருகின்ற 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு – வடமேற்கு தி திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ”காழ்ப்புணர்வால் வன்மம்” திமுகவை விமர்சிக்கிறாரா திருமாவளவன்? அப்செட்டில் ஸ்டாலின்

எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 25 ஆம் தேதி, ச்தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 26 ஆம் தேதி . கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 27 ஆம் தேதி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)

ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 44, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) 34, பாம்பன் (ராமநாதபுரம்) 28, மண்டபம் (ராமநாதபுரம்) 27, கோடியக்கரை (மயிலாடுதுறை) 17, ராமநாதபுரம் (ராமநாதபுரம்) 13, வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 12, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 11, திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 10, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), காரைக்கால் (காரைக்கால்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Latest News