TN Ration Shops: ரேஷன் கடைகளில் வந்த அதிரடி மாற்றம்.. நோட் பண்ணிக்கோங்க மக்களே!
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருடகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை கடைகள் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகள்: தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருடகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை கடைகள் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடைகளில் உள்ள விலையை விட ரேஷன் கடைகளில் விலை மிகவும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ரேஷனில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25 க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
சேலத்தில் வந்தது புதிய முறை:
இதனை சரிசெய்யும் வகையில் ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேசன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்யப்பட்டு சோதனை அடிப்படையில் ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் வரவேற்பை பொருத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் திட்டத்தை விரிவுப்படுத்த உணவுப்பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.
முன்னாக, ஜூன் 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024ஆம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஜுலை 2024ஆம் மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜுலை 2024ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.
Also Read: சில்லென மாறிய சென்னை.. நகரின் அனேக பகுதிகளில் கொட்டும் மழை..
குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜூலை 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுலை 2024 ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.