5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறை.. இனி இப்படி தான் பொருட்கள் வாங்க முடியும்..

ரேஷனில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25 க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறை.. இனி இப்படி தான் பொருட்கள் வாங்க முடியும்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 01 Aug 2024 15:07 PM

ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட்டுகளில்: ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து இதனை நடைமுறை படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருடகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை கடைகள் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடைகளில் உள்ள விலையை விட ரேஷன் கடைகளில் விலை மிகவும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி ரேஷனில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25 க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அதாவது ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரிசியை கடத்தி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் கூட ரேஷன் பொருட்களை கடத்தி சென்ற 619 வாகனங்கள் பிடிப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தவும், அதனை சரிசெய்யும் வகையில், ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டம்… ஓபனாக பேசிய நடிகை நோரா ஃபதேஹி!

அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்யப்பட்டு சோதனை அடிப்படையில் ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் வரவேற்பை பொருத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் திட்டத்தை விரிவுப்படுத்த உணவுப்பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.

Latest News