5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Special Buses: பக்ரீத் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் சிறப்பு பேருந்துகள்.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாடு சிறப்பு பேருந்துகள்: முகூர்த்தம், வார இறுதி நாட்கள், பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 545 சிறப்பு பேருந்துகளும், நாளை (சனிக்கிழமை) அன்று 585 சிறப்பு பேருந்துகளும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) அன்று 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 17/06/2024 அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

TN Special Buses: பக்ரீத் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் சிறப்பு பேருந்துகள்.. எங்கெல்லாம் தெரியுமா?
பேருந்துகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Jun 2024 08:53 AM

முகூர்த்தம், வார இறுதி நாட்கள், பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”14/06/2024 (வெள்ளிக் கிழமை) 15/06/2024 (சனிக்கிழமை) 16/06/2024 (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை மற்றும் 17/06/2024 (திங்கள் கிழமை ) பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்க இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read: மேடையிலேயே அமித் ஷா கண்டித்தாரா? தமிழிசை தந்த பரபரப்பு விளக்கம்!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14/06/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 545 சிறப்பு பேருந்துகளும் 15/06/2024 (சனிக்கிழமை) அன்று 585 சிறப்பு பேருந்துகளும் 16/06/2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 17/06/2024 (திங்கள் கிழமை) அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 14/06/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் 15/06/2024 (சனிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் ஆக 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி, திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 10,894 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5,957 பயணிகளும் திங்கள் கிழமை அன்று 5,926 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: ”3ஆம் பாலினத்தவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Latest News