TN Special Buses: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?
சிறப்பு பேருந்துகள்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது. பொது மக்களின் வசதிக்காக பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் தமிழக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை நாட்களில் சென்னை, கோவை என முக்கிய நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புகின்றனர்.
சிறப்பு பேருந்துகள்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது. பொது மக்களின் வசதிக்காக பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் தமிழக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை நாட்களில் சென்னை, கோவை என முக்கிய நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் பொது மக்களும் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதாவது, பள்ளிகளுக்கு வரும் 24, 25 மற்றும் 26 ஆம் தேதி என தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Also Read: இன்றைய முக்கியச் செய்திகள்.. நாடு முழுவதும் நடந்தது என்ன?
எங்கெங்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்?
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, கும்பகோணம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் 485 பேருந்துகளும், 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23 மற்றும் 24ஆம் தேதிகளில் 70 பேருந்துகளும, மாதவரத்தில் இருந்து 23, 24ஆகிய தேதிகளில் 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Also Read: பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் அசால்ட்டாக திருடிய இளைஞர்!
மேலும், வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாத ஆலயத் திருவிழாவை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்தும், தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு மொத்தம் 1,050 சிறப்பு பேருந்துகள் வரும் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnstc.in/home.html, TNSTC official App செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.