5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay Students Meet: மாணவர்களுக்கு நாளை பரிசளிக்கும் த.வெ.க தலைவர் விஜய்.. எகிறும் எதிர்பார்ப்பு!

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி நிகழ்வு தமிழ்நாடு அளவில் பேசும் பொருளானது. எனவே, நாளை நடைபெறும் நிகழ்வில் கட்சி தொடங்கிய பிறகு மாணவர்களிடம் முதல்முறையாக விஜய் பேச உள்ளார். 

TVK Vijay Students Meet: மாணவர்களுக்கு  நாளை பரிசளிக்கும் த.வெ.க தலைவர் விஜய்.. எகிறும் எதிர்பார்ப்பு!
விஜய்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Jun 2024 16:50 PM

மாணவர்களுக்கு நாளை பரிசளிக்கும் விஜய்: தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்து இருந்தார். மேலும், தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்துள்ள விஜய் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனக்கு இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்பு முதல் முறையாக மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்க உள்ளார்.  2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க உள்ளார். முதற்கட்டமாக நாளை 21 மாவட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளார்.

Also Read: இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்..!

அதன்படி, அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை விஜய்  நாளை சந்திக்க உள்ளார்.  சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்கள் மற்றும பெற்றோர் அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மாணவர்களிடம் முதல்முறையாக பேசப்போகும் விஜய்:

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து தன் கைப்பட அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி நிகழ்வு தமிழ்நாடு அளவில் பேசும் பொருளானது. எனவே, நாளை நடைபெறும் நிகழ்வில் கட்சி தொடங்கிய பிறகு மாணவர்களிடம் முதல்முறையாக விஜய் பேச உள்ளார்.

கடந்த ஆண்டு விஜய் அரசியல் சார்ந்த கருத்துகளை பேசியிருந்தார். குறிப்பாக, பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. கடந்த முறை நடிகராக மட்டுமே விஜய் இந்த கருத்துகளை தெரிவித்திருந்தார். ஆனால், இம்முறை விஜய் அரசியில் கட்சியின் தலைவராக இருப்பதால் என்ன கருத்துகளை பேசுவார் என்பது மாணவர்கள், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Also Read: திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா? சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரபரப்பு விளக்கம்!

Latest News