5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது.. தமிழக அரசு அறிவிப்பு..

தமிழின வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அளவு பங்காற்றிய தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் தமிழக அரசின் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு சுதந்திர தின விழாவின் போது முதல்வரால் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2021 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கும், 2022ஆம் ஆண்டுக்கான விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கும், 2023ஆம் ஆண்டுக்கான விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கும் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது.. தமிழக அரசு அறிவிப்பு..
குமரி ஆனந்தன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Nov 2024 18:56 PM

தகைசால் தமிழர் விருது: தகைசால் தமிழர் விருதிற்கு, விடுதலைப் போராட்ட வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருது வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்கள். இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரையா, ஆர்.நல்லகண்ணு மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை மெட்ரோவை நாடிச் செல்லும் மக்கள்.. ஒரு கோடியை நெருங்கும் பயணிகளின் எண்ணிக்கை..

இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (1.8.2024) நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டப்பேரவை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குமரி அனந்தனுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உலக தாய்ப்பால் வாரம்: தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் உயர்ந்துள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

தமிழின வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அளவு பங்காற்றிய தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் தமிழக அரசின் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு சுதந்திர தின விழாவின் போது முதல்வரால் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2021 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கும், 2022ஆம் ஆண்டுக்கான விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கும், 2023ஆம் ஆண்டுக்கான விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கும் வழங்கப்பட்டது. அந்த வரிசையில் இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு வழங்கப்படுகிறது.

Latest News