கட்டிப்பிடி வைத்தியம்.. பிரச்னைக்கு காரணமான காவலரும், பேருந்து நடத்துனரும் ஆரத் தழுவி சமாதானம்! - Tamil News | | TV9 Tamil

கட்டிப்பிடி வைத்தியம்.. பிரச்னைக்கு காரணமான காவலரும், பேருந்து நடத்துனரும் ஆரத் தழுவி சமாதானம்!

Updated On: 

25 May 2024 17:06 PM

நாகர்கோவில் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் பிரச்னையை கிளப்பிய சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனரும், காவலரும் ஆரத்தழுவி சமாதானம் செய்துக் கொண்டனர். மேலும், காவலரும் நடத்துனரும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்து, போக்குவரத்து, காவல்துறை ஆகிய இரு துறைகளும் நண்பர்களாக செயல்பட வேண்டும் எனக் கூறி  டீ குடித்தப்படி கட்டியணைத்து சமரசனம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டிப்பிடி வைத்தியம்.. பிரச்னைக்கு காரணமான காவலரும், பேருந்து நடத்துனரும் ஆரத் தழுவி சமாதானம்!

நடத்துனர் - காவலர்

Follow Us On

முடிவுக்கு வந்த டிக்கெட் பிரச்னை:  நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் காவலர் மற்றும் பேருந்து நடத்துனருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்திருந்தன. இது பழிக்கு பழியா என்று மக்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் பிரச்னையை கிளப்பிய சம்பந்தப்பட்ட நடத்துனரும், காவலரும் ஆரத்தழுவி சமாதானம் செய்துக் கொண்டனர். மேலும், காவலரும் நடத்துனரும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்து, போக்குவரத்து, காவல்துறை ஆகிய இரு துறைகளும் நண்பர்களாக செயல்பட வேண்டும் எனக் கூறி  டீ குடித்தப்படி கட்டியணைத்து சமரசனம் செய்து கொண்டனர்.

என்ன நடந்தது?

நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடி நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் காவலர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு கேட்டபோது, அரசுப்பேருந்தில் அரசு ஊழியர்கள் பணி நிமித்தமாக செல்லும்போது டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார். அப்படி எல்லாம் ரூல்ஸ் எதுவும் இல்லை என்று தொடர்ந்து நடத்துனர் காவலரை டிக்கெட் எடுக்க வற்புறுத்தியுள்ளார்.

Also Read: புது வகையான பீர்கள் அறிமுகம்.. டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த பீர் விற்பனை…!

மேலும், நாங்களும் அரசு ஊழியர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் தேவையில்லை என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகியுள்ளது. காவலரும் விடாப்பிடியாக தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், நடத்துனர் காவலரை டிக்கெட் எடுத்து பயணம் செய்யுங்க என நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். நானும் அரசு வேலைக்கு தான் போகிறேன். உங்கள் துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இலவசம், எங்களுக்கு இல்லையா என்று தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்நிலையில், போக்குவரத்து துறை சார்பில், சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. இந்த நிலையில், நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ‘ரிமல்’ புயல் எதிரொலி.. தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
Exit mobile version