Tamilnadu Weather Alert: சென்னைக்கு இன்று ஒரு நாள் ரெஸ்ட்.. 12 ஆம் தேதி முதல் மழையின் ஆட்டம் ஆரம்பம்.. வெதர்மேன் சொல்வது என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மிதமான மழை பதிவானது. அதனை தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது. மேலும், அடையாமடை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கோடியக்கரை (மயிலாடுதுறை) தலா 9, குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), மன்னார்குடி (திருவாரூர்), திருவாரூர் (திருவாரூர்), இரணியல் (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tamilnadu Weather Alert: சென்னைக்கு இன்று ஒரு நாள் ரெஸ்ட்.. 12 ஆம் தேதி முதல் மழையின் ஆட்டம் ஆரம்பம்.. வெதர்மேன் சொல்வது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

10 Nov 2024 09:59 AM

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி இருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. வட கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை மட்டுமே பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மிதமான மழை பதிவானது. அதனை தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் அடையாமடை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கோடியக்கரை (மயிலாடுதுறை) தலா 9, குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), மன்னார்குடி (திருவாரூர்), திருவாரூர் (திருவாரூர்), இரணியல் (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் 12 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு:


இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை இருக்காது என்றும் வரும் 12 ஆம் தேதி முதல் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதாவது நாளை மறுநாள் முதல் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 12 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் முதலில் சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களில் தொடங்கி பின் படிப்படியாக பிற மாவட்டங்களில் மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (09-11-2024) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் படிக்க: Weather Alert: மக்களே உஷார்.. “இனி வரும் புயல்கள்..” மத்திய அரசு பகீர் வார்னிங்!

இதன் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 12 ஆம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் 13 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க: ’தளபதி 69’ படப்பிடிப்பின் இடையே ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்!

அதேபோல் வரும் 14 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், திண்டுக்கல், திண்டுக்கல், திண்டுக்கல். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் 12 ஆம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் நிலையில், நவம்பர் 2வது வாரத்திலிருந்து மழையின் அளவு படிப்படியாக உயரும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!
ஹல்தி போட்டோஸை வெளியிட்ட ரம்யா பாண்டியன்