5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: வட தமிழகத்தை ஒட்டியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை..

வங்கக்கடலில் உருவ்வாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் வட கடலோர மாவட்டங்களில் தொடங்கிய மழை மெல்ல மெல்ல தென் மாவட்டங்களுக்கு நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Weather Alert: வட தமிழகத்தை ஒட்டியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Nov 2024 08:27 AM

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்றைய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மேற்கு மத்திய வளைகுடாவை ஒட்டி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடங்கி இருக்கும் நிலையில் நவம்பர் 2வது வாரம் முதல் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

15 ஆம் தேதி வரை நீடிக்கும் மழை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கனமழை எதிரொலி.. சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..

வரும் 15 ஆம் தேதி,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை:


வங்கக்கடலில் உருவ்வாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் வட கடலோர மாவட்டங்களில் தொடங்கிய மழை மெல்ல மெல்ல தென் மாவட்டங்களுக்கு நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலை தென்பட்ட நிலையில் இனி பரவலாக மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரேஷன் பொருட்கள் விற்பனையில் அதிரடி மாற்றம்.. இனி இந்த அளவில் தான் பொருட்கள் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

நவம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி தரப்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மழை நீர் தேங்கும் பகுதிகளில் போதிய முன்னெச்சரிக்கை நாவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Latest News