Tamilnadu Weather Alert: மழையால் ஸ்தம்பித்த மதுரை.. இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. - Tamil News | tamilnadu weather alert 13 oct interiors of tamilnadu likely to recieve good amount of rainfall today | TV9 Tamil

Tamilnadu Weather Alert: மழையால் ஸ்தம்பித்த மதுரை.. இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

இன்று திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Tamilnadu Weather Alert: மழையால் ஸ்தம்பித்த மதுரை.. இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Oct 2024 07:22 AM

தென்தமிழகம் மற்றும் தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்  நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டின் அனேக பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. அந்த வரிசையில் நேற்று மாலை முதல் மதுரையில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரே நாளில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஏறபட்ட வெள்ளப்பெருக்கால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஒரு சில பகுதிகளில் கார்கள் நீரில் மூழ்கின. மதுரை மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை கொட்டியது. இந்த மழையானது இன்றும் நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க நாளை தொடங்கி வரும் 17 ஆம் தேதி வரை சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் நாளை முதல் நல்ல மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் , காரைக்கால் பகுதியில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 15 ஆம் தேதி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 16 ஆம் தேதி, வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதி, நீலகிரி, ஈரோடு, சேலம் , தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?