5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: மழைக்கு ரெடியா மக்களே..! மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி..

கடந்த சில நாட்களுக்கு முன், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (17-10-2024) அதிகாலை 0430 மணி அளவில் வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் - நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது. இதன் காரணமாக 15 ஆம் தேதி வட தமிழகத்தில் கனமழை கொட்டியது.

Tamilnadu Weather Alert: மழைக்கு ரெடியா மக்களே..! மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 18 Oct 2024 11:22 AM

வடக்கு அந்தமான் கடற்பகுதியில் வரும் 22 ஆம் தேதி வாக்கில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்தமான் கடற்பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிடுகையில், அந்தமான் கடற்பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் இது வட மேற்கு திசை நோக்கி நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெறாமல் இருந்தால், தமிழகம் நோக்கி வரக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது என்றும், அது வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகரும் எனவும் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் நல்ல மழை இருக்கும் என பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (17-10-2024) அதிகாலை 0430 மணி அளவில் வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் – நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது. இதன் காரணமாக 15 ஆம் தேதி வட தமிழகத்தில் கனமழை கொட்டியது. ஆனால் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழையில் அளவு குறைந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)

ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) 7, மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை மாவட்டம்) 6, கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்), காட்பாடி (வேலூர் மாவட்டம்), மண்டலம் 02 மணலி (சென்னை மாவட்டம்), வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) தலா 5, காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) 4, குடியாத்தம் (வேலூர் மாவட்டம்), மண்டலம் 13 அடையார் (சென்னை மாவட்டம்), மேலாளத்தூர் (வேலூர் மாவட்டம்), பொன்னை அணை (வேலூர் மாவட்டம்), மண்டலம் 13 அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை மாவட்டம்), அம்மூர் (வாலாஜா ரயில்வே) (இராணிப்பேட்டை மாவட்டம்), கோபிசெட்டிபாளையம் (மாவட்டம்). ஈரோடு), விரிஞ்சிபுரம் ஏடபிள்யூஎஸ் (வேலூர் மாவட்டம்), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை மாவட்டம்), மண்டலம் 04 தொண்டியார்பேட்டை (சென்னை மாவட்டம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்), மண்டலம் 05 ஜிசிசி (சென்னை மாவட்டம்), பெரம்பூர் (சென்னை மாவட்டம்) தலா 3,

மேலும் படிக்க: ஹமாஸ் தலைவரை படுகொலை செய்த இஸ்ரேல்.. யார் இந்த யாஹ்யா சின்வார்?

மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை மாவட்டம்), கலவாய் பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை மாவட்டம்), ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்), அண்ணா பல்கலைக்கழகம் ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்), திருப்பூர் கேவிகே ஏடபிள்யூஎஸ் (திருவள்ளூர் மாவட்டம்), தரமணி ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாவட்டம்) , மண்டலம் 06 திரு.வி.க நகர் (சென்னை மாவட்டம்), திரு-வி-கா நகர் (சென்னை மாவட்டம்), ராயபுரம் (சென்னை மாவட்டம்), ஆர்.கே.பேட்டை ஏஆர்ஜி (திருவள்ளூர் மாவட்டம்), சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை மாவட்டம்), தலா 2 செ.மீ மழை பதிவானது.

Latest News