Tamilnadu Weather Alert: நவம்பர் 2ஆம் வாரம் முதல் தீவிரமடையும் வட கிழக்கு பருவ மழை.. 123% அதிக மழைக்கு வாய்ப்பு.. - Tamil News | tamilnadu weather alert 1st nov 2024 northeast monsoon to intensify during the second week know more in details | TV9 Tamil

Tamilnadu Weather Alert: நவம்பர் 2ஆம் வாரம் முதல் தீவிரமடையும் வட கிழக்கு பருவ மழை.. 123% அதிக மழைக்கு வாய்ப்பு..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: நவம்பர் 2ஆம் வாரம் முதல் தீவிரமடையும் வட கிழக்கு பருவ மழை.. 123% அதிக மழைக்கு வாய்ப்பு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

01 Nov 2024 19:40 PM

நவம்பர் 2வது வாரத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என இந்திய் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் அது ஆந்திரா மற்றும் தமிழ்நாடு நோக்கி நகரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 2அது வாரத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென் மேற்கு பருவ மழை இருக்கும். இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல மழை பொழிவு இருக்கும். தமிழ்நாட்டிலும் நல்ல மழை இருக்கும்.

தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை:

அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை இருக்கும், அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கும் பருவ மழை தொடங்கியது. தென் மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது ஆந்திரா நோக்கி நகர்ந்து சென்றதன் காரணமாக மழை பொழிவு பொய்து போனது.

மேலும் படிக்க: 3வது டெஸ்டின் முதல் நாள் ஓவர்.. தடுமாறும் இந்தியா.. ரோஹித், கோலி மீண்டும் ஏமாற்றம்!

ஆனால் நவம்பர் மாதம் தொடக்கம் முதல் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் என்றும், சுமார் 123% அதிக மழை பொழிவு இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் வரும் நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தமிழ்நாடு ஆந்திரா நோக்கி நகரும் காரணத்தால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீபாவளியன்று பதிவு செய்யப்பட்ட 347 வழக்குகள்.. கடந்த ஆண்டு எவ்வளவு தெரியுமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் இன்று
நடிகை ஹன்சிகா மோத்வானியின் நியூ ஆல்பம்
புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப் - என்ன தெரியுமா?
ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் தேங்காய் பால்..!