5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tamilnadu Weather Alert: 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 02 Nov 2024 13:11 PM

தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நவம்பர் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஒரே நிகழ்ச்சியில் திருமா – விஜய் ? எங்கே ? எப்போது? அரசியலில் நடக்கப்போகும் புது ட்விஸ்ட்.. ..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: டிகிரி போதும்.. மாதம் ரூ.80,000 சம்பளம்… வங்கியில் சூப்பரான வேலை!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல், அரபிக்கடல் பகுதிகளில், இன்று தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)

பெரியாறு (தேனி), ஆயிக்குடி (தென்காசி) தலா 7, ராமநாதபுரம் (ராமநாதபுரம்) 6, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), RSCL-2 கெடார் (விழுப்புரம்) தலா 5, மஞ்சளாறு (தேனி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), பெரியபட்டி (மதுரை), கடலாடி (ராமநாதபுரம்), நத்தம் (திண்டுக்கல்), நத்தம் AWS (திண்டுக்கல்) தலா 4, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), தாராபுரம் (திருப்பூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), தொண்டி (ராமநாதபுரம்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), ராசிபுரம் (நாமக்கல்), அடவிநயினார் அணை (தென்காசி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), பெரியகுளம் (தேனி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), செருமுள்ளி (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), வீரபாண்டி (தேனி), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), வாடிப்பட்டி (மதுரை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), புவனகிரி (கடலூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 3 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

Latest News